சொல்ல மறந்த கதை.

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


வெறும் வெற்று புகழ்ச்சிகளால் நிரம்பிய, துதிகளை மட்டுமே மையப் பொருளாக கொண்ட வரலாற்று படைப்புகள் தமிழ்ச்சூழலில் அதிகம். சமீபகாலங்களில் மக்களை முன்வைத்த சமகால வரலாற்று படைப்புகள் பூக்க ஆரம்பித்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டிய விசய்ம்.அந்த வகையில் சமீபத்தில் சயந்தன் எழுதி தமிழினி பெளியிட்டு இருக்கு நாவல் ஆறா வடு.

சமகாலத்தில் அதிகம் விமர்ச்சிக்கப்படுகிற ,அரசியல் போர்த்திய சூடான விசயம் ஈழத் தமிழ்ர்களின் போராட்டமும் அதை ஒட்டிய வாழ்வும்.அதை களமாக கொண்டு வெளிவந்திருக்கும் படைப்பு தான் இது. நாவல் என்ற போதிலும் 21 பகுதிகளாக் பிரித்து எழுதப்பட்டுள்ள இந்த படைப்பு போர்ச்சூழலில் மனிதர்களின் உணர்ச்சிகளை மிக கவனமாக பதிந்துள்ளது.அது எந்த போராக இருந்தாலும் அதற்கு பொருந்தும் வகையில் மிக திறம்பட படைத்துள்ளார் படைப்பாளி. பாராட்டுக்கள்.இலங்கை பிரச்சனையை முனவைத்து கருத்து சொல்லும் கருத்துவாதிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய படைப்பு என்பதில் எந்த மாறுப்பட்ட கருத்தும் இல்லை.

நாவல் இலங்கையின் வழக்கு மொழியில் எழிதியிருப்பது கூடுதல் பலம்.விடுதலைப்புலிகளிகள் மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் இந்திய அமைதிபடையினால் ஏற்ப்பட்ட தாக்கம் ஆகியவை தான் இப்படைப்பின் அடிநாதம்.

வெளியீடு:த்மிழினி.விலை.ரூ.120/- 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP