வணக்கம் பஸ்தார்.-இந்திய மாவோஸ்டு இயக்கத்தின் வெளிவராத ஜம்பதாண்டு கால வரலாறு

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


வணக்கம் பஸ்தார்.-இந்திய மாவோஸ்டு இயக்கத்தின் வெளிவராத ஜம்பதாண்டு கால வரலாறு




சில நேரங்களில் சரித்திரம் ஓர் இல்லத்தரசி போல் நடந்து கொள்கிறது.அது நிகழ்காலத்தினுடைய காதுகளில் எதிர் காலத்திலும் தொட்ரப்போகும் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி முணுமுணுக்கும். நிகழ்காலத்திலேயே அதற்கான கவனம் செலுத்த வேண்டும் .இந்தியாவினுடைய நிகழ்காலம் எப்பொழுதும் ஒரு கர்வம் மிகுந்த பெண்ணைப் போலவே நட்ந்துகொள்கிறது.அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொண்ட்தேயில்லை. எதையும் கவனித்த்தும் இல்லை.

இன்று உலகெங்கும் ஆட்சியாளர்கள் அதிகம் உச்சரிக்கம் சொல் பயங்கரவாதம்.என்றால் அதில் மாற்றம் இருக்காது.செப் 11 பிறகு அரசியலில் புதிய உத்வேகம் பெற்ற சொல். புதிய பொருள் தரும் சொல். அரசு என்ற அமைப்பு உருவானதில் இருந்தே அதற்க்கு எதிரான குரல் காலம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருப்பது காலத்தின் உயிர்மூச்சு போல.

எதிர்ப்புகுரலை அரசு தன் கட்டவிழ்த்து விட்டப்பட்ட கைகள் மூலம் அதை அடித்து நொருக்குவதும் ,அழிப்பதும் வெளி வராத வரலாறு. அது மக்கள் வரலாறு என்று தற்ப்போது வெளிவர ஆரம்பித்திருப்பது வரலாற்று ஆர்வலருக்கும் எதிர்கால சந்த்திக்கும் ஒர் இனிய செய்திதான்.

இந்தியாவிலும் மிக முக்கிய பிரச்சனையாக அரசுகள் மாறினாலும் காட்சி மாறாத கதையாக தொடர்வது நக்சல் மற்றும் மாவோயிஸ பிரச்சனை.60 களின் தொடக்கத்தில் சிலிகுரியில் ஒரு சிறு தீப்பொறியாக உருவாகிய ஒர் சிந்தனை இவ்வளவு பெறிய தீவிபத்தாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“ புரட்சி என்பது ஒரு கேளிகை விருந்தல்ல ஒரு சித்திரத்தையல் வேலையுமல்ல அதை மெனமையாகவும் ,படிப்படியாகவும் கவனமாகவும் ,மரியாதையுடனும்,நாகரீகத்துடனும் ,வெளிப்படையாகவும் ,பணிவுடனும் நட்த்தி சொல்ல முடியாது.புரட்சி என்பது ஒர் கலகம்.ஒரு நடவடிக்கை மூலம் ஓரினம் மற்றொன்றை தோற்கடிப்பதாகும்”  எனகிற கருத்து அடிப்படையில் தோன்றிய இயக்கம் இன்று இந்திய அரசுக்கு சொப்பன சுந்தரி கணட கனவாய் தீர்க்க முடியாத அமீபா கதையாய் மாறிப்போனதின் கடந்த ஜம்பது ஆண்டு வரலாற்றை பேசுகிறது  “வணக்கம் பஸ்தார்’ எழுதியவர் ராகுல் பாண்டிடா.தமிழில் மு.ந.புகழேந்தி.

வாசிக்கப்பட வேண்டிய நூல்!!வெளியீடு: எதிர் வெளியீடு. விலை. ரூ.150/-

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP