மாசாய் மாரா----இயற்கை அதிசயம்

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய புலம்பெயர்தல் இது.உணவு (புற்கள்) தீர்ந்து விடும் போது வில்டர்பீஸ்ட் எனப்ப்டும் காட்டெருமைகள் ,மானகள்,வரிக்குதிரைகள் எல்லாம் கூட்டமாக ம்ற்றொரு இடத்துக்கும் போகும்.இந்தப் பயணதில் அத்தனை ஆபத்துக்கள் உண்டு.முதலைகள் நிரைந்த நதிகளை கடக்க வேண்டும்.இந்தப் புலம் பெயர்தலை எதிர்பார்த்துப் பசியோடு காத்திருக்கும் சிங்கங்களிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் கழுதைப்புலிகளிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.

செரன்கெட்டி என்ற ஒரு இடத்திலிருந்து மாசாய் மாரா என்ற ஒரு இடம் வரை இவை செல்கின்றன.”இயற்கையின் அதிசய்ங்களில்” இந்தப் புலம் பெயர்தலும் உண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பயந்த்தின் பங்கேற்பாளர்களின் பட்டியலைப் கொஞ்சம் மட்டும் பார்ப்போம்...
டொபி மான்கள் ---95,000
இம்பாலா மான்கள்----76,000
காட்டெருமைகள்----46,000
க்ரண்ட் மான்கள்---26,000
கோங்கொணி மான்கள்---14,000
ஒட்டகச்சிவிங்கிகள்---9000
காட்டுப்பன்றி---6000
வாட்டர்பக் மான்கள்--2000
யானைகள்----2000
வில்ட்ர்பீஸ்ட்---13,00,000
வரிக்குதிரை---1,91,000
தாம்சன் மான் ---3,60,600
பட்டியல் போதுமா...
இந்தப் பயந்த்தின் துரம் 500 கி.மீ

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP