இன்றைய சிந்தனைக்கு

>> சனி, 21 ஜூலை, 2012


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்பது சிந்தனை சொற்கள்.ஆனால் நாமோ சுவரை பற்றி கவலைப்படாமல் சித்திரம் வரைய முற்படுகிறோம்,
இன்று நம்மில் 99 சதவீதம் பேருக்கு பால் வேறுபாடு அற்று இருப்பது அஸிடிட்டி பிரச்சனை. சிலருக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும்!!வயிறு உப்பசம், திடிரென்று வயிற்று வலி,நெஞ்சுக்கு கீழே வலிப்பது,முதுகு மற்றும் மூட்டுகளில் வலி வருவது போன்ற அனைத்தும் இதன் வேலை தான்.
முறையற்ற உணவுப்பழக்கம்,நஞ்சான உணவு, கலப்பட எண்ணெய்,ரோட்டோர கடைகளின் சுத்தமற்ற உணவு ஆகியவைகளில் வருவது இது.உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்லவேண்டும் என்பது மருத்துவரின் அறிவுரை.ஆனால் நாமோ சாப்பிட்டவுடன் அப்படியே படுக்கையில் படுப்பது!!
காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சூடாக மெதுவடையும் டீயும் குடிப்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தினசரி வழக்கம். இது மிக முக்கிய காரணம் அஸிடிட்டி வருவதற்கு.
அஸிடிட்டி வந்தால் குறைந்தபடசம் ஒரு நாள் உங்களுக்கு அவுட்.மருந்துகள் எடுத்தாலும் கூட. அதற்கு இதை வராமல் தடுக்க பார்ப்பதே உத்தமம்
ஒமிஸ்.ஜிண்டக்,பேன் டி போன்ற மருந்துகள் இதற்கு மாற்று. அஸிடிட்டி தொடரும் படசத்தில் அவை பெப்டிக் அல்சர் மற்றும் கனைய பாதிப்பு அளவுக்கு சென்றுவிடும்.

உங்கள் உடல்நலத்திலும் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்.. பிறகு சிந்தியுங்கள் பணம்..வேலை போன்றவ்ற்றை.. இலையென்றால் பணம் பொருள் எல்லாம் இருக்கும்..வாய்க்க்ய் ருசியா ஒன்னும் சாப்பிட முடியாது... 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP