அழிவின் விளிம்பில்..-4

>> சனி, 21 ஜூலை, 2012


ஒல்லித் தேவாங்கு(slender loris-loris tardigradus(linnaeus))

சிறிய ஒல்லியான உடலமைப்பும் கூர்மையான பெரிய கண்களும் கொண்டது ஒல்லித்தேவாங்கு.நீண்ட காலகள் ந்ன்கு வளர்ந்த ஆட்காட்டி விரல் பெரிய காதுகள்,வால் இல்லாமை ஆகிய்வை தேவாங்கின் குறிப்பிடத்தக்க அமச்ங்களாகும் இதன் உடல் திண்ணிய பழுப்பு நிறமும் வெள்ளி நிற முடியும் கொண்டுள்ளது.ஒல்லித் தேவாங்கு இரவில் வேட்டையாடி உண்ணும் விலங்காகும்.இது மரங்களிலும் புதர்களிலும் ஏறியும் திரிந்தும் ,தீங்கனிகள்,பூச்சிகள் மரத்தேரைகள் பல்லி வகைகள் சிறு பற்வைகள் ஆகியவற்றை உண்டும் வாழ்கிறது .இது பகல் நேரத்தில் தன் உடலை பந்து போல சுருட்டிக் கொண்டு தலையைக் கால்களுக்கிடையே புதைத்து கொண்டு கைகளால் மரத்தினைப் பற்றி கொண்டு ஒய்வெடுத்துக் கொள்ளுதல் விசித்திரமாக தோற்றமளிக்கும்.

இந்த தென்னிந்திய உச்சவுயர்வு உயிரினம் கேரளா,தமிழ்நாடு ,கர்நாடக்ம்,ஆந்திரப்பிரதேசம் ஆகிய் மாநிலங்களில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.கண் நோயகளுக்கு நிவாரணம் அளிக்க வல்லது என்ற தவறான கருத்தினாலும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு தேவைப்படுவதாலும் இது மிகுந்த அளவில் வேட்டையாடப் படுவதால் ,இதன் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP