அழிவின் விளிம்பில்..-3

>> சனி, 21 ஜூலை, 2012


நீலகிரி மந்தி(nilgiri langur-presbytis johni(fischer)

நிலகிரி மந்தி பளபளப்பான கருமையான உடலும் மஞ்சளும் பழுப்பு வண்னமும் கல்ந்த தலையும் அமையப் பெற்றது.இதன் உடல் அளவு சாதரண குரங்கைப் போன்றே இருக்கும் .இதற்க்கு நீண்ட வால் உள்ளது.இதன் பெயர் நமக்கு சுட்டி காட்டுவது போல மேற்குத தொடர்ச்ச்சி மலையில் உள்ள நீலகிரியில் இது காணப்படுகிறது.கர்நாடகவில் உள்ள குடகு பகுதியிலிருந்து தமிழ் நாட்டில் உள்ள பழனி மலை வரையிலும் ,ஆனைமலை பிரம்மகிரி பகுதிகலிலும்,கேரளாவில் உள்ள ஏலக்காய் மலை வரையிலும் இவ்வகை குரங்குகள் பரவிக்கிடக்கின்றன்..

இவை 5 முதல் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களகவே திரியும்.இதன் முக்கிய தீனி பழங்கள்,இலைகள் மற்றும் தண்டுகளாகும்.அவ்வப்போது விளை நிலங்களையும் வேட்டையாடும். சோலைகாடுகளை மனிதன் அழித்து ஆகிரமித்து கொண்டதால் அமீபகாலத்தில் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.மேலும் இதன் மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும் சிற்றின்ப உணர்ச்சியை தூண்டும் மருந்து கொண்டுள்ளதாகக் க்ருதப்ப்டும் இதன் இறைச்சிக்காகவும் வேட்டையாடபடுவதால் இது ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP