அழிவின் விளிம்பில் -1

>> சனி, 21 ஜூலை, 2012


சிங்க வால் குரங்கு(lion tailed macaque-macaca silenus(linnaeus):

இந்தியாவில் உள்ள உயிரினங்களில் மிகவும் ஆபத்துக்குள்ளாகி இருப்பது சிங்கவால் குரங்கு.கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளதாக்கில் நீர்மின் திட்டம் ஆரம்பிக்க முனைந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட சலசலப்பில் ,இது மக்கள் கவனத்திற்க்கு வந்தது.இத்திட்டம் கைவிடப்பட்டதால் சிங்கவால் குரங்கின் எதிர் காலம் ஒளிபெற்றத் திகழ்கிறது.கறுப்பு முடியும் நன்கு அடர்ந்த சாம்பல் நிறமுடைய பிடரி மயிரும் வாலின் முனையில் கொத்தான முடியமைப்பும் கொண்டு காண்பதற்க்கு கோமாளி போலத் தோற்றமளிக்கும்.இது பசுமையான் வெப்பமண்டல்க் காடுகளில் தங்கி அங்குள்ள பழங்கள் இலைகள் மொட்டுக்கள் ஆகியவற்றை உண்டு வாழ்கிறது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள் நீலகிரி,ஆனைமலை. ஏலக்காய் மலை,அமைதிப்பள்ளதாக்கு ,மற்றும் பெரியார் சரணாயலத்தில் இக்குரங்கு காணப்படுகிறது.

வெப்ப மண்டல்க் காடுக்ளில் தாக்கும்பிடித்து வசிக்கும் சிங்கவால் குரங்கு மிகவும் வலிமையான் விலங்காகும்.இது பருத்த உடலும் கட்டைக் குட்டையான காலகளும் துருத்திய வட்டமான் மூஞ்சியும் தடித்த புருவங்களும் கொண்டு காணப்படுகிறது.இதன் கன்னப்பை உண்வை ஒதுக்கிச் சேர்த்து இருத்திப் பின்னர் சாவகாசமாக உண்பதற்க்கு பயன்படுகிறது

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP