அழிவின் விழிம்பில்..-20

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


கரடி.
(sloth bear-melursus ursinus(shaw))

இதற்கு நீண்ட பறட்டையான கருவண்ண முடியும் மார்பில் ‘ V ' வடிவமான வெண்ணிற குறியும் இருக்கும்.தலை பெரியதாகவும் மூஞ்சி துறுத்திக் கொண்டும் இருப்பதால முகம் முக்கோன வடிவமாக தெரியும்.காலகளில் தட்டையான பாதங்களும் அவ்ற்றின் முன்புறம் நீண்ட வெண்ணிற வளை நகங்களும் இருக்கும்.கரட்டியின் பாதச்சுவடுகள் பார்ப்பதற்க்கு மனிதனின் பாதச் சுவடுகள் போன்றே தெரியும்.

பாறைகள் மிகுந்த இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகேயுள்ள காடுகள் ஆகிய இடங்கலில் ஏறக்குறைஉ இந்தியா முழுவதும் காணப்படும்.இது இரவில் இஅரை தேடும் பழக்கம் கொண்டது.பழங்கள் பூக்கள் வேர்த் தண்டுகள் தேன் எறும்புகள் பற்வைகள் மற்றும் முட்டைகளே இஅதன் ஆகாராமாகும்.  

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP