அழிவின் விழிம்பில்..-11

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


பல்லாப் பூனை
(pallas cat-felis manul(pallas))

அளவில் வீட்டுப் பூனையைப் போன்றே காணப்படும் பல்லாப் பூனைக்கு அடர்த்தியான நீண்ட வாலும் வால் முழுவதும் கருப்பு வளையங்களும் முனையில் கொத்தான கருப்பு முடியும் இருக்கும்.இதன் காதுகள் சிறியன்.உடலின் பின்புறம் காணப்படும் மங்கிய கருநிறப்பட்டைகளும் முகத்தில் உள்ள ஒரு சோடி பட்டைகளும் இதனை வேறுபடுத்தி காட்டும் அடையாளங்களாகும்.

இந்த பூனையின் உறுமலில் ,நாயின் குரைப்பும் ஆந்தையின் அலறலும் கல்ந்து கேடகும்.லடாக்,ஜம்மு மற்றும் காஷ்மீரில் காணப்படும் பல்லாப் பூனை பாறை மிகுந்த பகுதிகளில் வாழ்கிறது.சிறிய பாலூட்டிகள் மற்றும் பறவைகளை உண்ணும் .பாறைபகுதிகளில் உருமறைப்புடன் வாழுவதற்க்கு இதன் உடல் வண்ணம் பெருமளவில் உதவி புரிகிறது. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP