அழிவின் விழிம்பில்..-16

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


லிங்க்ஸ் பூனை
(lynx-felis lynx(isabellina blyth))

குறுகிய வால்,நீண்ட காலகள்,பனிக் கட்டிகளில் நடப்பதற்கேற்ற பாதங்கள்,கதுகளில் கொத்தான முடி,மற்றும் முகத்தில் மீசை போன்ர முடிக் க்ற்றைகள் ஆகியவற்றை கொண்டது லிங்க்ஸ் பூனை.உஅடல் மங்கிய பழிப்பு அல்லது சாமபல் நிறமுடையாதாக் இருக்கும்.ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.இவ்வகை புள்ளிகள் கால்க்ளிலும் வயிற்றின் பக்க வாட்டுப் பகுதிகளிலும் குறிப்பாக காணப்படும்.

உயரமான இடங்க்ளில் உள்ள காட்டுப் பகுதிகளில் குறிப்பாக புதர்கள்,நாணற் செடிகள் மற்றும் புற்கள் நிறைந்த அடர்த்தியான பகுதிக்ளில் இந்த வலிமைமிக்க லிங்க்ஸ் பூனை காணப்படும்.ந்ன்கு மரமேறவும் நீந்தவும் தெரிந்த இது வேட்டையாடுவதோ தரையில் மட்டுமே.பெரும்பாலும் பற்வைகளையும் சிறிய வகை பாலுட்டிகளையும் வேட்டையாடினாலும் அவ்வப்போது செம்மறியாடு ,வெள்ளாடுகளையும் பதம் பார்க்கும்.இது பூமியின் வடபகுதியில் குறிப்பாக வட அமெரிக்கா ,கனடா மற்றும் ஜரோப்பாவில் வாசம் செய்கிறது.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மட்டுமே லிங்க்ஸ் பூனை காணமுடியும்.

இது பெரும்பாலும் தமிமையாகவே காணப்படும்.ஆயினும் அவ்வப்போது குழுக்களாக சிறிய மரக்கட்டைகள் அல்லது முறிந்து  விழுந்த கிளைகள் ஆகியவற்றில் உள்ள பொந்துகளில் வசிக்கும்.ஒரு ஈற்றில் பெண் லிங்க்ஸ் பூனை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈன்றேடுக்கும்.

மென்மயிர் படர்ந்த அழகிய தோழுக்காக வேட்டையாடப்படுவதால் இந்தியாவில் லிங்க்ஸ் பூனை அரிய ஆபூர்வ விலங்காகிவிட்டது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP