அழிவின் விழிம்பில்..-13

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


மீன்பிடிப் பூனை
(fishing cat-felis viverrina(bennett))

தோழுக்காக வேட்டையாடப்படும் சிறிய வகைப் பூனைகளில் மீன்பிடிப் பூனையைவிடச் ச்ற்றுப் பெரியதாக இருக்கும்.மீன்பிடிப் பூனைக்கு பழுப்பு நிறம் கலந்த சாம்பல் நிறமான உடலும் அதில் கரும்புள்ளிகளும் குருகிய வாலும் உண்டு.கன்னத்தில் காணப்படும் ஒரு சோடிப் பட்டைகளும் நெற்றிப் பகுதியில் உள்ள 6 முதல் 8 வரை எண்ணிக் கையிலான கருங்கோடுகளும் ,இதனை  மற்ற பூனைகளிருந்து வேறுபடுத்தி காட்டும்.கால் விரல்களுக்கிடையே தோலடி இருப்பது இதன் சிறப்பம்சமாகும் இந்த தோலடி விரலகளின் உதவியால் இது நீருக்குள் இறங்காமலே எளிதாக மீன்களைப் பிடித்து உண்ணும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள் நீரோடைகள் ஆறுகள் சதுப்பு நிலங்கள் போன்றவற்றுக்கு அருகே உள்ள காடுகளில் இது வாசம் செய்யும் .மேலும் மேற்க்குவங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள் ,ஒரிஸ்ஸாவில் உள்ள் சிலகா ஏரி,கேரளாவில் உள்ள உப்பங்கழிக்காயல் ஆகிய இடங்க்ளிலும் இதனைக் காணலாம்.

தோலுக்காக வரைமுறையற்ற விதத்தில் வேட்டையாடப்பட்டதால்  மீன்பிடிப்பூனையின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.மென் மயிர் கொண்ட தோலாடை மேலக்கி ஒன்று செய்ய 30-35 பூனைக்ளின் தோலகள் தேவைப்படுகின்றன.இதன் தோழுக்காக ந்டைபெறும் வியாபரமே இந்த விலங்கினை ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP