அழிவின் விழிம்பில்..-25

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


எறும்புத் தின்னி
the indian pangolin -manis crassicaudata(gray)

” பங்கோலின்” என்றழைக்கப்படும் எறும்பு தின்னிகள் கூரிய நுண்ணறிவுள்ள விலங்குகளாகும்.மற்ற பாலூட்டிகளை போல் அல்லாமல் உடல் முழுவதும் அமைந்துள்ள செதில்கள் இதற்குப் பாதுகாப்பு கவசமாக பயன் படுகிறது.உடலில் உள்ள முடிகளே காலப் போக்கில் செதில்களாக மாறிவிட்டன.உடலின் அடிப்பகுதியில் செதிள்களுக்கிடையே கரடுமுரடான முடிகள் இருப்பதைக் காணலாம்.அச்சுருத்தப்படும் நேரங்களில் தனது உடலை  இரும்பு குண்டைப் போல சுருட்டிக் கொள்ளும் இதன் தனமை,ஒரு சிறப்பு மிக்க அமசமாகும்.இதர்க்கு நல்ல உடல் வலு இருப்பதால இவ்வாறு சுருட்டி கொண்ட இதன் உடலை திருமப இயலபான நிலைக்கு விரிப்பது என்பது ந்ம்மால் இயலாத செயலே.
 
தந்து முன்னங்காலகளைவிட் நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகலையும் செதிள்களையும் தோண்டியெடுத்து  இது திண்ணும் திறன் கொண்டது.இது பொதுவாக பொந்துக்ளில் வசித்தாலும், ந்ன்கு மரமேறி மர எறும்புக்ளை தேடி உண்ணும்.பற்றிப் பிடிக்கும் திறம் கொண்ட வால்,எறும்புத்தின்னி மரமேறும்போது தேவையான பிடிமானதை கொடுக்கிறது.

இந்திய எறும்புத்தின்னி ச்ம்வெளி பகுதிக்ளிலும் இமயமலையில் சற்றுத் தாழ்வான பகுதிக்ளிலும் காணப்படுகிறது.பங்கோலின் இனத்தைசார்ந்த சீனா பங்கோலின் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமய்மலை பகுதிகளில் காணப்படுகிறது.உறைவிட் அழிப்பாழும் மருத்துவ குண்ம கொண்டது என்ற தவறான நம்பிக்கையாலும் இது வேட்டையாடப் படுவதால் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP