அழிவின் விழிம்பில்..-24

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


சிவப்பு பாண்டா
red panada-ailurus fulgens -(f.cuvier)

சிவப்பு பாண்டா இரவில் வேட்டையாடும் மரத்தில் வசிக்கும் விலங்காகும்.கரடிக் குடும்பத்திற்க்கு நெருங்கிய பூனை போன்று தோன்றும் சிவப்பு பாண்டா அழகிய ரோமம் அடர்ந்த செக்கர் நிறத் தோல கொண்டது.வெள்ளையான முகமும் உருண்டையான தலையும் கொண்டது.மென்மயிர்க் கொத்துள்ள வாலும் அதில் மங்கிய அல்லது திண்ணிய செந்நிற வளையங்களும் வால முனையில் கருமையும் காணப்படும்.
தரையில் மெதுவாக செல்லும் சிவப்பு பாண்டா மரங்களில் வேகமாக ஏறக் கூடியது.நேபாளம் ,சிக்கிம்,பர்மா மற்றும் தென் சீனாவை ஒட்டியுள்ள இமயமலை பகுதிகளில் காணலாம்.மூங்கில்  தலைகள் ,பழங்கள்,வேர்கள் ,பூச்சிகள்,பற்வையின் முட்டைகள் ஆகியவற்றை தின்று வாழும்.ஆயினும் உயிரியல் வளர்க்கப்படும் சிவப்பு பாண்டாக்கள் ரொட்டி,பால் ,முட்டைகள் மற்றும் சிறிய பறவைகளை கூடத் தின்னவல்லவை.இது பூனையை போலச் சீறவும் கரடியை போல உறுமவும் ,நாயை போல குரைக்கவும் வல்லது.பொதுவாக இது தந்து மூஞ்சியை நீரில் வைத்து கரடியைப் போல நீரை உறிஞ்சிக் குடிக்கும்.பூனையை போல சிவப்பு பாணட தனது வளை நகங்களை சற்றெ காலுக்குள் இழுத்து வைத்து கொள்ளக்கூடியது. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP