அழிவின் விழிம்பில்..-23

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


கரடிப் பூனை
(binturong(or)bear cat-arctictis binturong (raffles)

பூனைக் குடும்பத்தை சார்ந்த மற்ற பூனைகள் போல் அல்லாமல் கரடி போல் இருப்பதாலும் பறட்டையான உடல் இருப்பதாலும் இது கரடி பூனை எனப் பெயர் பெற்றது.இது அடர்ந்த காடுகளில் 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வசிக்கும்.கருமையான முடிகொண்ட தோலுள்ள இப்பூனையின் உடலில் வெள்ளை அல்லது மங்கிய மஞ்சள் நிறமுடைய முடிகளும் இருப்பதால் நரைத்தது போல் தோன்றும்.இதன் குறுகிய காதுகளின் முனையில் நீளக் கொத்தாக முடி இருக்கும்.இதன் பற்கள் சிறியன.
 
கரடிப்பூனை மரத்ஹில் வசிக்கவல்லது.இதன் அடர்த்தியான வால் மரக்கிளையைப் பிடிக்க மற்றொரு கரம் போல உதவுகிறது.இது இரவில் வேட்டையாடும் விலங்காதலால் பகல் நேரத்தில் மரப் பொந்துகளில் தலையை வாலுக்கடியில் சுருட்டி வைத்து இருக்கும்.பொழுது சாய்ந்ததும் மரப்பொந்தை விட்டு வெளியேறி சற்றெ திறந்த தனது உதடுகள் மூலம் “உஸ்” என்ற சீறல் ஒலி எழுப்பிக்கொண்டே தந்து இரையைதேடிப் புறப்படும்.

அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் காடுகளில் கரடிப்பூனை வசிக்கிறது.அடர்ந்த மரங்களினுடே இது மெதுவாக ஆனால் திறமையாக இடம்பெய்ர்ந்து செல்லக்கூடியது.இது சிறிய வகை பாலூட்டிகள் பறவைகள் மீன் மண்புழுக்கள் பூச்சிகள் மற்றும் பழங்களை தின்று வாழ்கிறது. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP