எட்டுத்திக்கும் போட்டுத்தாக்கும் போண்டா!!!

>> திங்கள், 9 பிப்ரவரி, 2015

உளுந்துவடையும் பருப்பு வடையப்பற்றியும் பேசிட்டு என்னைப்பற்றி பேசாமல் போனால் என்ன என்று காலையில் என்னிடம் டீக் கடையில் சண்டை போட வந்து விட்டர் திருவாளர் போண்ட!!! அப்பறம் என்ன சமாதனம் சொல்லிட்டு வந்து இப்ப டைப்பிங்!!

பொதுவாக உளுந்து வடை அனைத்து உணவகஙளிலும் கிடைக்கும்.பருப்பு வடையை பொறுத்த வரை தள்ளு வண்டிகடைகள் தான் மெயின் மற்றும் டீ கடைகள். இதே அளவுக்கு வண்டிகடைகளிலும் டீ கடைகளிலும் மக்களின் மனதில் பக்கவாக சம்மனம் போட்டு அமர்ந்திருப்பது போண்டா!!
போண்டா உருவத்தை பொருத்தவரை ஒரே வடிவம் தான். ஆனால் இதில் வகைகள் தான் பல. சாதரன மாவு போண்டா,கீரை போண்டா,ஆனியன் போண்டா,மசால் போண்டா எனப அப்பன முருகா....எத்தனை ரகம்!!. ஏன் ஊருப் பெயரில் இடம் பெற்ற தனித்த சிறப்பு உடையது போண்டாதான். ஆம் ..மைசூர் போண்டா!!

கடலை மாவு கொண்டு செய்யப்படும் இந்த பலகாரத்தில் மஹாராஜா என்றால் அது மசால் போண்டா தான். இதற்கு சட்னியே தேவையில்லை. கூட இருந்தாலும் ஒகே!! இதன் பெஸ்ட் கோம்போ என்றால் தேங்காய் சட்னிதான்!! அதுவும் கொஞ்சம் மிதமான அல்லது கெட்டி சட்னி பக்க கோம்போ!!
மேல் பகுதியில் இருக்கும் கடலை மாவு கோட்டிங்கை சட்னியோடு தொட்டு ஒரு விள்ளல் நாக்கில் படும் போது தேங்காய் ருசி...மாவின் ருசி... மசாலின் ருசி என மூன்றும் கலக்கும் போது...... சொல்லவா வேண்டும் நாக்கில் பட்சுகளின் ஆட்டத்தை !!

உருளை கிழங்கு போண்டாவை பொறுத்தவரை ஈரோட்டில் அவ்வளவு பெரிய வித்தியாசம் கடைகளுக்குள் இல்லை. அளவு மற்றும் விலையை தவிர . திருநகர்காலனி டீக் கடை தொட்டு கொல்லம்பாளையும் அரிசி குடோன் வரை.சில இடங்களில் சட்னி உண்டு..சில இடங்களில் இல்லை. இந்த இடத்தில் ஒரு விசயத்தை சொல்லவேண்டும்....தலமை தபால்நிலையம் ரோட்டில் டிப்டாப் எதிர் ரோட்டில் போனால் சுமார் 100 அடியில் லெப்டில் ரோடு கட் ஆகும்.அதன் முனையில் மாலை வேளையில் மட்டும் ஒரு வண்டிக்கடை இயங்கும். இங்கே வடை போண்டா பஜ்ஜி அனைத்தும் தரமாக இருக்கும்.இங்கே என்ன சிறப்பு என்றால் சட்னி ..ஆம்... புளி மற்றும் பொதினா கலந்த சட்னி அருமையாக இருக்கும். வாய்ப்பு இருப்பவ்ர்கள் ருசித்துப்பாருங்கள்.
போண்டாவில் வெரைட்டி காட்டுவது மற்ற வகை போண்டாக்களில் தான் .குறிப்பாக கடலை மாவு போண்டாவை பொறுத்த வரை பெறும்பாலான இடங்களில் கல்லு போலவே இருக்கும். விசேசங்களில் இடம்பெற்றால் கன்பார்ம்...அது கருங்கல்லு தான். விசேங்களில் இந்த மாதிரி கடலை மாவு போண்டாங்களை தவிர்த்து விடுங்கள். பெரும்பாலோர் சாப்பிடமாட்டார்கள். அதுவும் அதை சுட்டு ஆறிப்போய் ..சொல்லவே தேவையில்லை..எதிரிக்கு கூட அந்த நிலமை வரக்கூடாது.

இந்த கடலை மாவு போண்டா கிருஷ்ணா தியேட்டர் முன்புறம் கொஞ்சம் தள்ளி இந்திரா நகர் செல்ல ஒரு ரோடு திரும்பும். அந்த முனையில் உள்ள வண்டிகடை போண்டாவிற்கு தான் .அதுவும் குறிப்பாக கடலைமாவு போண்டாவும் அவர்களின் காரமான சட்னியும் உணவுப்பிரியர்களை சுண்டி இழுக்கும்.இங்கு தவிர கொங்கலாம்மன் தெரு முனையில் இரண்டு வண்டிக்கடைகள் இருக்கும் இங்கும் கடலை மாவு போண்டா சின்ன சின்னதாக போடுவார்கள் மாலை வேளையில் .நன்றாக இருக்கும். எனது பால்ய கால நண்பர்களோடு இங்கு பல முறை உண்டது இன்னும் ஞாபகம் உள்ளது.மற்றொரு வண்டிக்கடை பரிமளம் காம்பிளஸ் எதிர்புற ரோட்டில் வயதான தம்பதிகள் நடத்தும் கடையிலும் நன்றாக இருக்கும்.விலையும் குறைவு.

கடலைமாவு போண்டாவை தொடர்ந்து சாப்பிடாதிங்க. என்றாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை.வயிற்றை அடைத்துக்கொள்ளும்.


கீரை போண்டா ..வெகு எளிமையான செய்முறை..குறைவான பொருட்கள். ஆனால் ருசியோ....பக்கா கலக்கல்.பொதுவாக தண்டுக்கீரையை வீடுகளில் அதிகம் செய்யமாட்டார்கள்.காரணம் அது கொஞ்சம் ருசி குறைவாக சப் என்று இருக்கும் .ஆனால் அதே தண்டுக்கீரை கடலைமாவுடன் கலக்கும் போது கிடைக்கும் சுவை ...டர்போ டாப்.
கீரை போண்டாவில் மாவு கலக்கும் பதம் மிக முக்கியம் .சிலருக்கு போண்டா கெட்டியாக வந்துவிடும். சிவரஞ்சினி எதிர்புறம் உள்ள கடையில் கீரை போண்டா தான் புகழ் பெற்றது.மேலே லேயர் அந்த கடலைமாவும் அரிசி மாவும் கீரையும் கலந்து வறுப்பட்டு உள்ளே சும்மா பஞ்சு போல இருக்கும் போண்டாவை தக்காளி சட்னியில் தொட்டு ஒரு விள்ளல் வாயில் போட்டால் அந்த கீரை மாவு நீண்டாதாக சீவப்பட்ட வெங்காய துண்டுகள் எல்லாம் சேர்ந்து நாக்கில் செம ஆட்டம் போடும்.இந்த வகை கீரை போண்டா சின்னதாக இருக்கும்.

இதே போண்டா பெரியதாகவும் போடுவர் சில கடைகளில். அதற்கு சட்னி தேவையில்லை. என் பேவரிட் இது .காலையில் ஸ்டேட் பேங் ரோட்டில் மாதா ஆலயம் அருகில் வண்டிக்கடையில் போடுவார்கள். சுட சுட....அருமையாக இருக்கும் இதுதவிர ரங்கா சைக்கிள் மார்ட் எதிர்புறம் உள்ள டீக்கடையிலும் காலையில் இந்த வகை பெரிய போண்டா போடுவாரக்ள். மக்கள் காலையிலேயே ரவுண்டு கட்டி அடிப்பார்கள்.

இந்த வகை பெரிய போண்டாவை சாப்பிடுவது தனிக்கலை.போண்டாவை ஒரு விள்ளல் பிட்டு அதை அப்படியே வாயில் போட்டு அந்த ருசியை அனுபவித்துவிட்டு அது கரையும் போது ஒரு சிப் டீ !!! இனிப்பு. காரம்...இனிப்பு...காரம் .இப்படி ஒரு கடி போண்டா ...ஒரு சிப் டீ!!!இதுதான் இதோடு ருசியின் சூட்சுமம். அதுவும் இதில் உள்ள பச்சைமிளகாய் வெந்து அந்த மாவுடோ கிடைக்கும் ருசியே அலாதி.....பெரும்பாலோர் மிளகாய் என்று தூக்கிப்போடுவார்கள். அது தவறு..அந்த மிளகாயோடு சாப்பிடவேண்டும்.அப்பதான் போண்டாவின் பூரண ருசி உஙக்ளுக்கு கிட்டும்!!.........

இன்னும் ருசிப்போம்...



0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP