மாமு..பஜ்ஜி ...பஜ்ஜி...பஜ்ஜி....மாமு...

>> திங்கள், 9 பிப்ரவரி, 2015

வடை போண்டா வகைமைகளில் கடைசி தம்பி பஜ்ஜி. இதன் சிறப்பே… வெரைட்டி தான்!! ஆனியன் பஜ்ஜியில் தொடங்கி அப்பள பஜ்ஜி வரை ..ஆள் ஆளுக்கு வித விதமாக போட்டு தாக்கிவிட்டார்கள். ஆனால் இதில் ஆகச்சிறப்பு ..இரண்டு தான் ஒன்று ஆனியன் பஜ்ஜி மற்றொன்று வாழைக்காய் பஜ்ஜி .இதற்கு நிகர் இதுதான்.

பொதுவாக பஜ்ஜி வகைகளுக்கு சட்னி கூடவே இருந்தால் தான் சிறப்பு. நம்மூரில் வாழைக்காய் பஜ்ஜிக்கு சட்னி கிடைக்காது. டீக்கடைகளில் பெரும்பாலு சட்னி இருக்காது. வண்டி கடைகளில் தான் சட்னி.
ஆனியன் பஜ்ஜிக்கு தக்காளி சட்னி செம் காம்போ!! இதானை ஈஸ்வரன் கோயில் வீதி வண்டிக்கடையில் மாலையில் சாப்பிடனும்... மிதமான டைலூயூட்டில் தக்காளி மற்றும் புளிச்சட்னிக்கு சுட் சுட ஆனியன் பஜ்ஜி கலக்கலாக இருக்கும். அதுவும் சூடாக இருக்கும் போது மேலே இருக்கும் மாவை மொதலில் கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு அந்த சட்னியில் தொட்டு சாப்பிட...அதற்குள் பஜ்ஜியின் ஒரு பகுதியில் சட்னி ஊறிவிடும்..இப்ப அந்த பகுதி சூடு ஆறிவிடும்..இப்ப அது ஒரு விள்ளல் போடுங்க... ருசி வேறு மாதிரி இருக்கும்.இறுதியில் அந்த ஆனியன் வெந்து இருக்கும் பாருங்க..அதை எடுத்து .அந்த சட்னியோடு சாப்பிடுங்க...தேவாமிரதமாக இருக்கும் .

இப்ப அடுத்த பஜ்ஜி ..அதற்குள் சூடான பஜ்ஜி ஆறி நன்றாக எடுத்து சாப்பிட மிதமான சூட்டில் இருக்கும். இப்ப பஜ்ஜியை சட்னியில் தொட்டு ஒரு கடி!!!!! இப்ப பஜ்ஜியில் ஒரு பகுதி ஒப்பனாக இருக்கும்..அந்த ஒப்பன் பகுதிக்குள் சட்னி உள்ளே புகும்படி சட்னியை ஒரு வாகாக எடுக்க...சட்னியோடு ஒரு கடி!! இப்ப இரண்டாவது கடியின் போது சட்னி பஜ்ஜி மாவு..ஆனியன் எல்லாம் கலந்து நாக்கில் கிடைக்கும்... அதுதான் தேவாமிர்தம்!!

வாழை பஜ்ஜியை பொறுத்தவரை இரண்டவகை உண்டு. ஒன்று சின்னதாக போடுவது மற்றொன்று வாழைக்காயில் நீள வாக்கில் போடுவது. பெரும்பாலும் நீலாவக்கில் போடுவது தான் அதிகம்.இதிலே மற்றொரு வகை நேந்திரம் பழத்தில் போடுவது கோவையில் இது பிரபலம். இதுதவிர ஈரோடு ரயில் நிலையத்தில் கிடைக்கும்  நம்பி சாப்பிட உத்திரவாதம் இல்லை.
எல்லா வண்டிக்கடையிலும் கிடைப்பது வாழைக்காய் பஜ்ஜிதான். கூடவே சட்னியோடு. ஆனால் வாழைக்காய் பஜ்ஜியை பொறுத்தவ்ரை சூடாக சாப்பிடுவது தான் உசிதம். இதற்கு தகுந்த சட்னி என்றால் தேங்காய் அல்லது எப்போதும் போல தக்காளி சட்னி தான். 

வாழைபஜ்ஜியில் சிறப்பே அந்த மாவோடு சாப்பிடும் போது மாவு அதிகமாக வாழைக்காயில் ஒட்டியிருக்க கூடாது.அப்படி இருந்தால் விக்கிவிடும்.கொஞ்சமாக மாவு..அதுவும் கொஞ்சம் காரத்தோடு கலந்து வெந்த வாழைக்காயுடன் ருசிப்பது அலாதி அனுபவம் தான் அதுவும் வாழைக்காயின் முனையில் ஒட்டி இருக்கும் அந்த தோல் தான் தனித்த சுவை.

எப்படி வடை போண்டா வகைகள் மக்களின் மனதில் இடம்பிடித்ததோ அதே போல் சப்பனம் இட்டு அமர்ந்தது மிளகாய் பஜ்ஜி. இன்று எங்கு கண்காட்சியோ விழாக்கலோ நடந்தா எது இருக்கிறதோ இல்லையோ மிளகாய் பஜ்ஜி கடை இருக்கும்.
மிள்காயில் 400 க்கும் அதிகமான வெரைட்டிகள் உள்ளது. நாம் பொதுவாக ப்யன்படுத்துவது சுமார் 5 அல்லது 6 வெரைட்டிகள் தான். அதில் பஜ்ஜிக்கு பயன்படுத்தும் மிளகாய் இரண்டு தான் ஒன்று அதிகமாக பயன்படுத்து நீண்ட பஜ்ஜி மிள்காய். மற்றொன்று குள்ள ரகம். தற்போது இந்த குள்ள ரகத்தை யாரும் பஜ்ஜிக்கு பயன்படுத்துவதில்லை.
என் பால்யகால வயதில் இந்த வகை குள்ள ரக மிள்காயில் போட்ட பஜ்ஜி தான் புகழ்பெற்றது. செம சூப்பராக இருக்கும். இந்த நீண்ட பஜ்ஜி மிள்காயில் சுவரசியம் இல்லை.தற்போது இந்த நீண்ட பஜ்ஜி மிள்காயில் உள்ளே காரத்திற்காக மசால் வைக்கிறார்கள்.

நம்மூரில் மிள்காய் பஜ்ஜியை அப்படியே கொடுத்து விடுவார்கள். முழு பஜ்ஜியாக . இதை கொடுக்கும் போதே சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து தர வேண்டும் .அதை கெட்டி தேங்காய் சட்னியில் துவட்டி சாப்பிட்டால் ..கலக்கல் காம்போ.பெரும்பாலும் நம்மூரில் தக்காளி சட்னிதான்.அதுவும் தண்ணிர் மாதிரி இருக்கும். அவை மிளகாய் பஜ்ஜிக்கு செட் ஆகாது.
மிளகாயில் சுவரசியமான விசயம்...ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு ஐரோப்பிய மக்கள் மிளகாயை பயன்படுத்துவதில்லை. உலகிலேயே காரமான மிளகாய் அஸ்ஸாமிலே விளைகிற “நாகஜோலோக்கிய” என்ற வகை மிளகாய் தான்.உலகிலேயே அதிகமாக மிளகாயை உற்பத்தி செய்யும் நாடும் இந்தியா தான். .

இத்துடன் சிற்றுண்டி வகையை முடித்துக்கொண்டு.....அடுத்து.....நாளை பாருங்கள்...அதகளம் தொடரும்...



0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP