நடுவில் சில போண்டாவை .....

>> திங்கள், 9 பிப்ரவரி, 2015

உண்மையில் டீக்கடைகளில் போண்டா என்றால் முதலில் வெங்காய் போண்டாதான். இப்போதுதான் உருளை கிழங்கு போண்டா எல்லாம். பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து அதனை கடலை மாவுடன் கலந்து போண்டாவாக போடுவது மிக எளிது.சுவையும் அருமையாக இருக்கும் .என் சிறுவயது பள்ளி நாட்களில் இந்த வகை போண்டா உண்டது இன்றும் ஞாபகம் உள்ளது.

வெளிப்புறம் முழுவதும் நன்றாக பிரை ஆகி இருக்கும் .உள்ளே மாவு மென்மையாக வெந்த வெங்காயத்துடன் நறுக் ந்றுக்கென்று .........வாவ்....பிறகு ஒரு கப் டீ. வாழ்க்கையை வாழலாம்!!!

!
இந்த வகை போண்டாக்கள் இப்போது கிடைப்பதில்லை. வேளாங்கன்னி போகும் போது திருவாரூரில் இந்த வகை போண்டா சாப்பிட்டதாக நினைவு. மற்ற படி வேறு எந்த ஊரிலாவது இந்த வகை போண்டா கிடைத்தால் தகவல் தாருங்கள்.

போண்டாவில் ஒன்றை விட்டதை சுட்டி காட்டினார் நண்பர் Ruben Jay ...அது முட்டை போண்ட. உண்மையில் முட்டை போண்டா எனக்குத்தெரிந்து கடைகளில் விட தியேட்டர்கலில் தான் பிரபலம்.நான் சொல்வது ஈரோட்டு பகுதியில்.

முதன் முதலில் ஈரோட்டில் ரவி தியேட்டர் தான் முட்டை போண்டாவிற்கு புகழ்பெற்றது.முழு முட்டையை அப்படியே மாவில் போட்டு எடுத்து சுட சுட தருவார்கள். அந்த வெளிப்புற மாவு கொஞ்சம் காரம் கலந்து மெது மெது என்று இருக்கும் .முட்டையின் சிறிய பகுதியில் வெள்ளை கருவில் கடிக்க தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மத்தியில் மஞ்சள் கருவைதனியாக ஒரு கடி ..பிற்கு வெள்ளை கரு மஞ்சள் கரு கலந்த கடி என்று இறுதியில் வெள்ளை கருவில் முடியும் அனுபவமே அலாதியானது. இப்போது இந்த தியேட்டர் இயங்குவது இல்லை.
இதற்கு அடுத்தார்போல் விஎஸ் பி தியேட்டரில் கலக்கலாக இருக்கும். இங்கு கேண்டின் வைத்திருப்பவர் என் நண்பர். இங்கே தான் அடிக்கடி மாலை வேளயில் இருப்பேன். மாலையில் சுட சுட முட்டை போண்டா அருமையாக இருக்கும். 

இங்கையும் தற்போது முட்டை போண்டா போடுவதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு பதிலாக முட்டை பப்ஸ் .நன்றாக இருக்கும்.
தற்போது எந்த தியேட்டரிலும் முட்டை போண்டா போடுவதில்லை. அதற்கு பதிலாக எல்லாம் முட்டை பப்ஸ் மயம். ஈரோட்டில் தியேட்டர் போன்ற பல இடங்களுக்கு என் நண்பன் தான் பப்ஸ் சப்ளை. இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன்
.
கருங்கள் பாளையம்போகும் வழியில் ஜீவல்லரிகடைகள் தாண்டிய பிறகு இந்திரா நகருக்கு ஒரு ரோடு திரும்பும்.அதன் முனையில் ஒரு வண்டிக்கடை காலையில் இருந்து மாலை வரை பலகாரங்கள் போடுவார்கள். அவர்கள் முட்டை போண்டா போடுகிறார்கள். சட்னியோடு. சூடாக கேட்டால் அப்போதே போட்டுத்தருவார்கல். இவர்கள் அந்த முட்டை போண்டாவை நான்காக கட் செய்து அதில் தக்காளி சட்னி உற்றிதருவார்கள்.
இதுதவிர முட்டை போண்டா கலாச்சாரத்தை தற்போது டாஸ்மார்க் பார்கள் கையில் எடுத்துக்கொண்டன. ஆம் இவை முட்டை போண்டாவாக இல்லாமல் முட்டை சில்லி என்று வேக வைத்த முட்டையை சிறு சிறுதுண்டுகளாக சில்லி போல போட்டுத்தருவார்கள்.சாப்பிட நான்றாக இருக்கும்.

தொடரும்..

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP