காளான் பிரை

>> வெள்ளி, 30 ஜனவரி, 2015

காளான் பிரை... சைவ பட்சிகள் மட்டுமின்றி அசைவ பட்சிகளும் விரும்பி உண்ணும் உணவு. நம்முரில் கிடைப்பது பெரும்பாலும் இரண்டு வகை தான்.சிப்பி மற்றும் மொட்டு காளான். காஷ்மீரில் கருப்பு வகை காளன் கிடைக்கிறது.மிகவும் சுவையாக இருக்கும் என்று தகவல். சுவைக்க வாய்ப்பு கிட்டவில்லை. நேற்று இரவு திடிரென்று பிரட் ஆம்லேட் சாப்பிட ஆசை. கூடவே காளான் பிரையும் இருந்தால் ...ம்ம்ம்.. ...இரவு சொர்க்கம் தான்!!

ஈரோடு கொல்லம்பாளையும் லோட்டஸ் மருத்துவமனை தாண்டி ரோடு திரும்பும் போது தூத்துக்குடி மீன் கடை எதிரில் ஒரு வண்டி கடை இருக்கும். இங்கு நன்றாக இருக்கும் என்று நண்பர் சொல்லியிருந்தார். சரி..ருசித்துப்பார்ப்போம் என்று வாங்கினேன். இது இந்தோ -சைனீஸ் முறை . மசால் போட்டு வருத்த காளானை மீண்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஆணியன் போட்டு செமி பிரையாக தருவது. பிரட்டுக்கும் காளானுக்கும் நல்ல காம்பினேசன். ஏற்கனவே கடலை மசால் கடையில் காளான் சாப்பிட்டுள்ளேன். அங்கே பிரட் துண்டுகளோடு கலந்து தருவாரக்ள். கொஞ்சம் காரமாக இருக்கனும் எப்போதும் காளன்.

ஒரு லோப் பிரட் எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை டைஸ் வடிவத்தில் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்..ஒரு தட்டில் வாங்கி வந்த காளான் பிரையை எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனியன் துண்டுகளை காளன் பிரை மேல் தூவுங்கள்.பிரட்டை ஒரு துண்டு பிட்டு அதனை ஆனியனும் காளானும் கலந்து பிரையை எடுத்து வாயில் போட்டு பாருங்கள்..சிறிய இனிப்பான பிரட்டும் காரமான ஆனியனும்......மசலா கலந்த காளானும் சேர்ந்து நாக்கில் குத்தாட்டாம் போடும்!!!
‪#‎ஈரோடு‬ வாசிகள் ருசித்து பாருங்க..
குறிப்பு:புகைப்படம் எடுக்கவில்லை...அடுத்த முறை போகும் போது எடுத்து பதிவிடுகிறேன்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP