ஏற்காடு எனக்கு பிடிக்காது-1

>> வெள்ளி, 30 ஜனவரி, 2015



 டிசம்பர் மாதத்தில் ஏற்காட்டில் ஒரு நல்ல விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து அருமையான காப்பி கையில்!!
.டீ சர்ட் வித் டிராக் ஸூட் போட்டுக்கொண்டு ஜெர்கினையும் அனிந்து கொண்டு தலைக்கு ஒரு தொப்பி.... காலுக்கு மறக்காம ஷூ ...... இப்ப .கிளம்புங்கள் .நடந்தே ஏற்காட்டை சுற்றிவாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இது போல ஒரு நாளை என்றும் வரவேற்க்க இயலாது. எவ்வளவு புத்துணர்ச்சியை அடைவீர்கள் என்பதை அனுபவம் உணர்த்தும்.
எட்டு அல்லது ஒன்பது மணிக்கு அறைக்கு திரும்புங்கள்…உஙகளுக்காக குளியலறையில் சுடு தண்ணிர் காத்து இருக்கும்.அருமையான குளியலை போடுங்கள்.சுட சுட இட்லி பொங்கல்..தோசைஅல்லது பூரி உங்களுக்கு காத்திருக்கும்.ஆசை தீர ருசித்து சாப்பிடுங்கள். பத்து மணியளவில் குடும்பத்துடன் ஏற்காடு ஏரிக்கு செல்லுங்கள்.
ஏரியின் அழகை முதலில் தூர இருந்தே ரசியுங்கள். சிறிது அமர்ந்து அதன் மெளனத்தில் கரைந்து போங்கள். ஆம் இயறகையுடன் இரண்டர கலந்து விடுங்கள். அனுபவியுங்கள் ஆன்மீகத்தை ..இப்படி!!
உங்கள் குடும்ப உறுப்பினர்களை கூட்டிக்கொண்டு ஏரியை ஒரு ரவுண்ட் நடந்தே வாருங்கள் ரம்மியமாக இருக்கும் அதன் பாதை எங்கும் .ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஏரி ஒரு அழகை உங்களுக்கு அள்ளி பருகவைக்கும்.அவ்வாறே வரும்போதே ஏரியை சுற்றி நிறைய வண்டிக்கடைகள் இருக்கும். அதில் கிடைக்கும் அருமையான டீ ..மிளகாய் பஜ்ஜி..முட்டை போண்டா.. என் எல்லாவற்றையும் மிக குறைவாய் வாங்கி எல்லோரும் பங்கிட்டு சாப்பிடுங்கள். உதரானத்துக்கு ஒரு முட்டை போண்டாவை வாங்கி நான்காக வெட்டித்தருவார்கள் …ஆளுக்கு ஒரு துண்டாக பங்கிட்டு சாப்பிடுங்கள். அந்த முட்டை போண்டா வைத்து கொடுத்த பேப்பரில் இருக்கும் சிறு துகளைகளை அல்லது சிதறி கிடக்கும் மஞ்சள் கருவின் சிதறிய சிறிய துகளை எடுத்து உங்கள் ஆசை குழந்தைக்கு அல்லது உங்களின் ஆசை மனைவிக்கு ஊட்டி விடுங்கள்.
உங்கள் குடும்பம் இன்னும் அதிகம் உங்களை நேசிக்கட்டும் !!! பிறகு விருப்பம் இருந்தால் ஏரியில் சென்று படகு செலுத்துங்கள். இல்லையென்றால் மீண்டும் திரும்ப் அறைக்கு செல்லுங்கள்.

மதியம் நேரம் நெருங்கியதால் வயிற்றில் ஆசிட் சுரக்கும்....பசி !!. நடந்தே செல்வதால் உண்டதும் உடனடியாக செரிக்கும்! விடுதியில் சாப்பிட விருப்பம் இல்லை என்றால் ஏற்காட்டில் உள்ள செல்வம் மெஸ்ஸுக்கு போங்கள் .மதிய உணவுக்கு ஒரு பிடி பிடியுங்கள். நடப்பன் ஊர்வன நீந்துவன பறப்பன என எல்லாம் உண்டு .ஆனால் இவர்களிடம் சிறப்பே மீன் தான். ஆம்…….உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஏறியில் பிடிக்கும் மீன்கள் இங்கே வருவலில் உங்கள் இலைக்கு கிடைக்கும். துண்டுஒன்று இருக்கும் உங்களின் இரண்டு உள்ளங்கை அளவுக்கு!! ருசியும் அமோகமாக இருக்கும்.
சைவமாக் இருந்தால் கவலையே படாதீர்கள் பேருந்து நிலையத்திற்கு நேர் எதிர்புறம் ஒரு மெஸ் உள்ளது.அருமையான சைவ சாப்பாடு கியரண்டி. பிறகு என்ன உண்டகளைப்புக்கு…….உறக்கம். அறைக்கு செல்லுங்கள்…அருமையான நித்திரை!!!

மாலை மணி நான்கு….அருமையான டீ அல்லது காபி உங்களை எழுப்பட்டும்.கொறிக்க சூடான ஆனியன் பக்கோட அல்லது காளான் பக்கோட அல்லது காலிபிளவ்ர் சில்லி!!ஏதோ ஒன்றோடு!! உள்ளே தள்ளிய பிறகு மீண்டும் நடந்தே ஏற்காடு…அல்லது இரு சக்கர வாகனம் அல்லது சைக்கிள் கிடைத்தால் சூப்பர். கிளம்புங்கள் சேர்வராயன் கோயில் நோக்கி அதுதான் ஏற்காடு மலையின் அதிகப்படியான உயரம். காற்று எப்போதும் நம்மை தாலாட்டிக்கொண்டே இருக்கும். சைக்கிள் பயனம் என்றால் கூடவே தண்ணிர் பாட்டிலை எடுக்க மறந்துவிடாதீரகள். கோயிலுக்கு செல்லுங்கள்…கொஞ்சம் ஆன்மீகம்…..முடிந்த பிறகு திறந்த வெளி இடத்திற்கு வாருங்கள்..உங்கள் குடும்பத்துடன் ஓடிப்பிடித்து விளையாடுங்கள் கூடவே காற்றையும் இனிய காலநிலையும் இனைத்துக்கொள்ள மறவாதீர்கள்.உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருனங்களில் ஒன்றாக இருக்கும்..நினைவில் வையுங்கள். பொக்கிசங்கள் விலை மதிப்பற்றவை. ஆம் மீண்டும் திரும்ப இயலாத நேரம் என்னும் காலத்தில் உங்கள் குடும்பத்துடன் செலவழித்த ஆகச்சிற்ப்பான தருனஙக்ள் பொக்கிசங்கள் அல்லவா உங்களுக்கு!!

ம்ம்ம் ஜாக்கிரதை..பாருங்கள்…நீங்கள்குடும்பத்துடன் நேரம் செலவிட்டதால் சூரியன் மலை உச்சியில் இருந்து மறைய ஆரம்பித்தை கூட கவனியாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறீரக்ள்.. ம்ம் கிளம்புங்கள்…விடுதிக்கு….அங்கே இன்னொரு ஆச்சர்யம காத்திருக்கு!!

விடுதிக்கு வந்தவுடன் சிறிய ஓய்வு…அருமையான குளியல்!! மாலை மணி 7.30 ….சூரியன் ஓய்வுக்கு போக…நிலா உங்களின் வரவை நல்வரவாக்க வானில் உதித்து தன் வெண்மை ஒளியால் உஙகளை மகிழ்விக்க முழு அழகையும் வெளிப்படுத்திக்கொண்டு இருக்க… உங்களின் அறைக்கு முன் நிமிர்த்தி வைக்கப்பட்ட பல நீண்ட கட்டைகள். அதற்கும் கீழே பல சுள்ளிகள்… அதை சுற்றிலும் அமர நாற்காலிகள். ஒருவர் அதை பற்ற வைக்க தீ கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ..இப்போது நன்கு பற்றி எரிய அதை சுற்றிலும் பரவும் வெப்பம்…. ஏற்காடின் குளிர்ந்த கற்றுக்கும் காலநிலைக்கும் இதமாக இருக்கும். அருகில் ஒரு பார்பிக் வைத்து அதில் சில மட்டன் துண்டுகளையும் சிக்கன் துண்டுகளை வேக வைக்க தொடங்கினால்……மற்றொரு பக்கம் மெல்லிய இசையோடு குடும்பத்துடன் அந்த இரவு பொழுது பொண்ணான இரவு. அந்த இரவை எப்படி வேண்டுமானலும் கொண்டாடுங்கள். விடியும் வரை கூட !!!
எத்தனை மணி வரையிலும் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் மலைப்பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் பாட்ல்களை அதிக சத்ததோடு வைக்க கூடாது. அதனால் முடிந்த வரை இரவு பத்து மணிக்கு மேல் இசைக்கவிடாதீர்கள்.அது மற்றவர்களுக்கு இம்சை அளிக்கும் என்பதால்!!
இது வரை நாம் பார்த்தது ஒருநாளை எப்படி ஏற்காட்டில் செலவழிக்கலாம் என்பது .ஏற்காட்டை பொருத்தவரை பார்க்கவேண்டிய இடங்கள் அல்லது சுற்றுளாக்கான இடங்களின் எண்ணிக்கௌ சுமார் பத்து இருக்கும் அவ்வளவே. பெரும்பாலும் எல்லாமே வீயூ பாயிண்ட்ஸ் போல தான் .ரோஸ் கார்டனை தவிர.

இதுதான் பூச்சி தின்னும் தாவரம்.
ஏற்காட்டில் மிக முக்கியமான் இடம் பொட்டானிக்கல் ரிசர்ச் செண்டர். இங்கே பலவிதமான சிறப்பு தாவரங்கள்,ஆர்கிட்கள் என இது ஒரு சுரங்கம். வார இறுதிநாட்களில் இவை இயங்காது.தவறவிடாத இடம் இங்கே தான் ஆகச்சிறப்பான சிலுவை மரம்,பூச்சி தின்னும் தாவரம் எல்லாம் உள்ளது.இங்கே சில ஆர்கிட்கள் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.தவறவிடாதீர்கள். இதுதவிர வேறு ஒன்றும் ஏற்காட்டில் இல்லை.

மொத்தமே சுற்றிப்பார்க்க என்றால் அதிகபடசம் ஒர் இரவு இரண்டு பகல் போதும். ஆனால் ரிலாக்ஸாக ஏற்காட்டை அனுபவித்து ரசிக்க வேண்டும் என்றால் அதிகபடசம் நான்கு நாள் இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் வெறுத்துப்போய்விடும். அதுவும் வார நாட்களை தேர்வு செய்தால் விடுதியை பொருத்தவரை அறைக்கட்டனம் வெகு குறைவாக கிடைக்கும் .பேரம் பேசுங்கள். அருமையான டிஸ்கவுண்ட் கிடைக்கும் வார இறுதி நாட்கள் என்றால் விடுதிக்காரர்கள் உங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். எப்படியும் விடுதிகள் நிறைந்து விடும் என்பதால்!!

தொடரும்..

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP