ஏற்காடு எனக்கு பிடிக்காது!!

>> வெள்ளி, 30 ஜனவரி, 2015


என் மனதுக்கு நெருக்கமான இடம் என்பது கடல் மற்றும் மலைகளும்.முதலில் காடு சார்ந்த மலை விசயத்தை பார்ப்போம். மலைகள் என்றேலே அந்த சில்லென்ற குளிர் காற்று..சீதோஷன நிலை அவ்வப்போது தூறல் போடும் மழை…புதுப்பெண்ணைப்போல சினுங்கும் சாறல் மழை…என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் எனக்கு என் மனதுக்கு நெருக்காமானது ஊட்டி.

கடவுளுக்கு என் மேல் அதீத பாசமோ என்னமோ என் மனைவியும் குன்னூரிலே அமைந்தார். இது வரமா சாபாமா என்று தெரியவில்லை.காலம் மட்டுமே பதில் சொல்லும்.

சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவிக்கு ஆசிரியை பணி கிடைத்தது.பணிக்கு சேரும் முன் எந்த ஊரில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கலாம். அதன் பெயர் கவுன்சிலிங்க். அது நடக்கும் இடம் சேலம் … மூன்று நாட்கள் நடைபெற்றதில் மூன்றாம் நாள் தான் என் மனைவிக்கு.வரிசைப்படி..வட மாவட்டங்கள் நிறைய காலியாக இருந்தது ஈரோட்டுக்கு அருகில் என்றால் ஏற்காடும் கொல்லி மலையும் தான். இது தவிர நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கன்னியிலும் காலியிடங்கள் இருந்தது. என்னபொருத்த வரை ஒன்று ஏற்காடு அல்லது வேளாங்கன்னி என்று எடுப்பதாக திட்டம்

ஏற்காட்டில் என் மகளை படிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை. மேலும் ஏற்காடு வருடம் முழுவதும் மிதமான குளிர். ஈரோடுக்கு பயனம் என்றாலும் சுமார் இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்தில் போய் விடலாம். அருகில் சேலத்தில் இருந்து போக்குவரத்து வசதி எல்லா ஊருக்கும் உள்ளது போன்றவை ப்ளஸ் பாயிண்டுகள் இருந்ததால் ஏற்காடு என்று முடிவு செய்து ஏற்காடு பணியிடம் வாங்கினோம்.

ஏற்கனவே ஏற்காட்டில் வீடு பிடித்த கதை எல்லாம் பேசியபடியால் அது வேண்டாம். இனி ஏற்காட்டை பற்றி பார்ப்போம்.வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாக தெரிவதை உள்ளே போய் பார்ப்போம்.
சேலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தான் . வெகு அருகில். சேலம் தாண்டியவுடன் மலைப்பாதை தொடங்கிவிடும். சுமார் 17 கிலோ மீட்டர் அவ்வளவே.இருசக்கரவாகணத்தில் 30 அல்லது 40 நிமிடத்தில் போய் விடலாம். பஸ் போக்குவரத்தை பொருத்தவரை 40 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கும்.இரவு சர்வீஸ் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு பேருந்து உண்டு அதை விட்டார் மறுபடியும் 4 மணிக்கு தான்.

ஏற்காடு என்பது லேக்கில் இருந்து அதே ரோட்டில் பயனப்பட்டால் மேலே பஸ் ஸ்டாண்டு மற்றும் அப்படியே மேலே போனாக் மாண்ட்போர்ட் பள்ளி அங்கிருந்து அப்படியே கொஞ்சம் கீழே இறங்கினால் கிறித்துவ அருட் சகோதரிகளின் மடம். அவ்வளவே. ஆனால் ஏற்காடு என்பது 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளடக்கிய மலை பகுதி. மொத்த மக்கள் தொகை சுமார் 40 ஆயிரம் .ஏற்காடு பற்றி உள்விசயங்களுக்கு https://www.facebook.com/notes/436786216339386/ இந்த லிங்கில் படிக்கவும்

ஏற்காட்டின் காலநிலை என்பது வருடம் முழுவதும் சுமார் 23 டிகிரி முதல் 27 டிகிரி சராசரியாக இருக்கும். அதனால் வருடம் முழுக்க சுற்றுளாவாசிகள் வரவு இருக்கும் ஆனால் வார நாட்களில் இருக்காது.காற்று வாங்கும் ஊர் இது. ஆம் ..திங்கள் முதல் வெள்ளி மதியம் வரை ஊரில் காக்கை குருவி போல ஆங்காங்கே பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு ஈயோட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.வெள்ளி மாலையில் இர்ந்து சுற்றுளாவாசிகள் ஏற்காடு வரத்தொட்ங்குவார்.அப்போது தான் அவ்வூருக்கு உயிர் வரும். ஞாயிறு மதியம் 4 மணி வரை.ஆம சுற்றுளாவாசிகள் ஞாயிறு அன்று பெட்டிய கட்டினால் ….இங்கே ஏற்காட்டில் போர்வையை இருக்க போத்திக்கொண்டு குப்பற படுத்து தூங்கவேண்டியது தான்.
பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து குறைவாக தான் சுற்றுளாவிற்கு வருவார்கள் .மிக அதிகமாக கர்நாட்கவில் இருந்து தான்.சில தங்கும் விடுதிகள் சேலம் நாமக்கல் போன்ற ஊர்களிருந்து வருபவர்களுக்கு  அறைகளை தரமாட்டார்கள். நான் பணியில் இருந்த விடுதியில் கூட இந்த விதிகளை திவிரமாக கடைபிடித்தோம்.. தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவே.

ஜூலை மாதத்தில் இருந்து மழை ஆரம்பிக்கும் ..கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகமாகி செப்டம்பர் அக்டோபர் நவம்பரில் மழை வெளுத்து எடுக்கும் .சேலத்தில் இருந்து இரண்டு வழிகள் உண்டு ஏற்காடு வர. தற்போது பயபடுத்தும் வழி இல்லாமல்கொஞ்சம் சுற்றிக்கொண்டு ஒரு வழி உண்டு. அது சிங்கிள் ரோடாக இருந்தாலும் டிராபிக் இருக்காது. இருசக்கர வாகனத்தில் பயனத்தை அனுபவிப்பர்களுக்கு ஏற்ற ரோடு. அருமையாக இருக்கும் பயனம்.கண்ணெக்கு எட்டிய வரை பசுமையாக டிராபிக் இல்லாமல் டிரைவ் செய்ய சூப்பர் ரோடு.அந்த வழியில் ஆற்றுப்பாலம் என்ற பகுதியில் அதிகமான மழை பொழியும் சமயங்களில் சில சமயம் மண் சரிவு ஏற்படும். பெரும் சேதங்கள் இதுவரை ஏற்பட்டதில்லை.இது யானைகளின் வலசை பாதை. சமீபத்தில் கர்நாடகத்தில் இருந்து வந்த யானைகள் இந்த வழியாக தான் ஏற்காடை அடைந்தது. அது செம ரகளையான கதை.

இந்த பகுதியில் விளையும் மாம்பலங்கள் தனித்த ருசியுடையவை. மாம்பல தோட்டங்கள் சில இப்பகுதியில் உண்டு.இது தவிர இப்பகுதி மலைகளும் சமவெளியும் கலந்த பகுதிகள்..இதில் விளையும் கம்பு தினை ,பப்பாளி,கொய்யா எல்லாம் செம ருசியாக இருக்கும். இந்தப் பகுதியில் தான் என் செம்பாதி ஆசிரியராக பணியில் உள்ளார்.


பெரும்பாலோர் ஏப்ரல் மே மாதம் தான் குளிர்பிரதேசங்கள் தங்க பார்வையிட தகுந்த காலாம் என்று நினைக்கிறார்கள் இது ஒரு வகை என்றால் இன்னொரு வகையும் உண்டு. அது அந்த ஊரின் மிக ஆழகான காலத்தில் அந்த ஊரில் தங்குவது என்பது. அந்த வகையில் ஏற்காடை அனுபவிக்க என்றால் டிசம்பர் மாதம் தான் ஆகச்சிறந்தது. இந்த மாதத்தில் அதிகப்பட்சம் 17 டிகிரியும் குறைந்த பட்சம் 13 டிகிரியும் இருக்கும். அருமையான கண்கொள்ள காட்சியாக இருக்கும். ஏற்காடு பொதுவாக சுற்றிகோண்டே இருக்கிற ஊர் அல்ல. இது ஒரு வெஸ்டர்ன் நாடுகளைப்போல அமைதியாக சில நாட்கள் கழித்து நம்மை பூஸ்ட் செய்துகொள்ள…அல்லது குடும்பத்துடன் நேரம் செலவ்ழிக்காமல் இருப்பவர்கள்..அவர்களுக்காக ..அவர்களுடன் நேரம் செலவழிக்க என்று செயல்படவேண்டிய மலைவாஸ்த்தலம் இது.

தொடரும்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP