நாட்குறிப்புகள்.

>> வெள்ளி, 30 ஜனவரி, 2015


இன்னும் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் சமையளரை இல்லாத இல்லங்கள் உருவாகும்.அதிகரித்துவரும் பெண்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு,பெருகி வரும் தனிக்குடுத்தனங்கள்,ஏறிய வரும் விலைவாசி அதனால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் காரணமாக கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வாழ்க்கை மூறை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய காரணஙக்ளால்.
இன்னும் சொல்லப்போனால் எதிர்காலத்தில் அரசு சமயறை இல்லாத இல்லங்களுக்கு மானியம் வழங்கும் முறை வரும்.வீட்டில் ஒவன் இருந்தால் போதும் என்று காலம் வரும்.முதற்கட்ட நகரங்கள் ஏற்கனவே இதை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது.இரண்டாம் கட்ட நகரங்களில் மெல்ல மெல்ல ப்ரோஜன் புட் நிருவனங்கள் குறிவைக்க ஆரம்பித்துவிட்டன.



ஈரோடு டூ கோவை பேஜன்சர் ரயில் காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்புகிறது. இந்த ரயிலில் திருப்பூருக்கு பிற்கு ஒருவர் கருப்பு சுண்டலை சுட சுட மசால் செய்து கொண்டு வருவார். .ஒரு பொட்டலம் பத்து ரூ.தான். மறக்காமா சாப்பிட்டுருங்க வாய்ப்பு கிடைக்கும் போது .இதே போல் அடுத்து 15 நிமிடத்தில் சுட சுட சின்ன ஆனியன் சமோசா வரும் .10 ரூபாய்க்கு மூன்று .மொரு மொரு என்று கலக்கலாக இருக்கும். இந்த சமோசாவுக்கு என் குழந்தை செம ரசிகை!!


இப்போது எல்லாம் கறிக்கடைக்கு பெறும்பாலும் ஆண்கள் தான் வருகிறார்கள் . ஞாயிறு அன்று கொஞ்ச நேரம் இந்த கறிக்கடையில் இருந்தால் செம காமெடியாக இருக்கும். விட்டின் பாஸ் சொல்லிவிட்டதை ....கொஞ்சம் கூட யோசிக்காமல் அச்சரம் பிசகமாக் அப்படியே வந்து கறிக்கடையில் ஆண்கள் ஒப்பிப்பாரக்ள்.அதிலொரு பயங்கர மொக்கை...” சார் எலும்பு இல்லாம கறி கொடுங்க..”



மீன் சாப்பிடுவது என் இல்லத்தில் ஒரு குதுகலமான விசயம் எனக்கும் என் குழந்தைக்கும்.மீணை கண்டிப்பாக தயிரில் கழுவித்தான் செய்யனும் .அப்பதான் மீன் கவிச்சி அடிக்காது. சுமார் 11 மணியளவில் மீன் குழம்பு ரெடி ஆக ஆக மனசு சும்மா பறக்கும்... மீன் குழம்பு கொதிச்சு ரெடியான பிறகு சுட சுட மீன் குழம்பில் இருக்கும் குழம்பு மீனை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டு தொலைகாட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது சொர்க்கத்தின் முதல் படி... முடித்த பிறகு ஒரு அரை மணி நேரம் ஓய்வு ..நக்குக்கு!! அடுத்து மீனை வறுக்க சொல்லிட்டு பெரிய வெங்காயத்தை கட் பன்னி தட்டில் வைத்துக்கொண்டு சுட சுட வருவல் மீனை ஒரு பிடி பிடிக்கனும். கூட தண்ணிர் தாகம் எடுத்தால் தண்ணிர் குடிக்காதீங்க... கருவேப்ப்லை ..கொத்தமல்லி போட்ட மோர் பக்கத்தில் ஒரு செம்பு வைத்துக்கொள்ளுஙக்ள். அதை குடியுங்கள். திவ்ய்மாய் இருக்கும்/.....இறுதியில் வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்கும்... அப்போது கொஞ்சம் சாதம் போட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டு வீட்டு தயிர் போட்டு அதில் மீன் குழம்பை கொஞ்சமாக கலந்து சாப்பீட்டால் ......அந்த ருசி...........அந்த ஞாயிற்றுக்கிழமை உஙக்ள் குடும்பதாருடன் .....சொர்க்க்கம் கன்பார்ம்!!!



என் பேவ்ரிட் ஏரியா தெருவேர உணவு கடைகள்(ஸ்ட்ரீட் புட்) பல புகழ்பெற்ற உணவகங்கள் தெருவோர உணவகங்களில் இருந்து தான் புதிய புதிய உணவு வகைகளை பிடிக்கின்றனர்.தமிழ்நாட்டில் அருமையான தெருவோர கடைகள் உள்ள ஊர் சேலம். இங்க பழைய பஸ் ஸ்டாண்ட் ஏரியா முழுக்கவே மிகப்பிரபலம். இரவு உணவுகள் சைவத்தில் பின்னி பெடலெடுக்கும். இதை தவிர்த்து கரூரில் டவுனுக்குள் மாரியம்மன் கோவில் ஏரியாவில் இரவு டிபன் பட்டைய கிளப்பும்.மதுரை முருகன் கடை இட்லி கடையில் கிடைக்கும் இட்லியைவிட இங்கே இடலி அம்சமாக இருக்கும். இந்த 6 வகை சட்னி...சாம்பார் எல்லாம் செமகுவாலிட்டி...தோசை அயிட்டங்கள் அதுதனிக்கதை!!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP