நீலகண்டப் பறவையைத் தேடி......

>> வியாழன், 2 ஆகஸ்ட், 2012


முத்தமிழை வளர்த்த என் மூதூராம் மதுரையில் பிறந்த என் இனிய தமிழ் தோழியே...ஒரு அந்திமாலையில் முகனூலில் தொடங்கியது நமது நட்பு என்னும் ஒரு பூ!! நந்தவனத்தில் பூத்த  பூக்களுக்கு மத்தியில் மூக்குத்தி அணிந்த அழகிய பூ..நமக்குள் பால் வேறுபாடு இருக்கலாம்... அதை புறங்கையால் ஊதிதள்ளிய ஊதாமலர்!.

ஒவ்வொரு நாளிகையிலும் மறக்காமல் நினைவுபடுத்தினாய் ....பதிவுகளாய்!மனதில் படட்தை துணிந்து சொன்னாய்!தெரியாததை தெரிந்து கொள்ள முனைப்புடன் முனைந்தாய்!

பலர் முயற்சித்தும் பெறாத  “விருப்ப”த்தை விரைவில் பெற்றாய்.கண் அயர்ந்த இரவுக்குள் ஆயிரம் நட்பு பூக்கள்-உன்னோடு!!மலைத்து நின்றேன்...

கடலை கடப்பது போல் பக்கங்களை கடந்து நின்றாய்...!பூரித்துப்போனேன்!!

அப்போது தெரியவில்லை....நீ குறிஞ்சி மலர் என்று!!
கால இடைவெளியில் பூப்பது இயற்கை!அந்த இயற்கையை தான் கொஞ்சம் மாற்றேன்??-என் கடவுளே!

எனக்கு பிடித்தது மூக்குத்தி!!நீ அனிந்தாதாலோ... அல்லது நம் ரசனை ஒத்துப்போனதாலோ!!யார் அறிவார்? 

அதற்காகவாது பதில் சொல்லி விட்டுப் போ!!

பெயர் கேட்டு அறியாத தேசத்தில் இருந்து ஒரு தோழி சொல்கிறாள்.. நீ என்னைப் பற்றி சொன்னதை ..எனக்கே தெரியாததை!!

எழுத்தாளனாவதை என் எழுத்து பார்த்துக்கொள்ளட்டும்!

மனம் சோம்பி அமர்ந்த தருணங்களில் உன் தமிழ் வேண்டும்! 

 தலர்ந்த நிலையில் உன் நேசம் வேண்டும்!

ஆண்டுகள் ஆயிரம் காத்திருந்தால் அகழிகை!!அது இதிகாசம்..

 அஃதென்றால் நம் நட்பும்.....!

எனக்காக வேண்டாம்... உன் நிகழ்வுகளை நினைத்திருக்கும் அயலகத்து தோழிக்காவது ஒரு சொல் தூது விட்டுப்போ!!!

அந்த சொல் கேட்டு விலகட்டும் என் ஜென்ம சாபம்!!

முகனூல் தோழி அலிசா சர்மிளாவுக்காக....

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP