அழிவின் விழிம்பில்..-52

>> வியாழன், 2 ஆகஸ்ட், 2012


சைபீரிய
Siberian crane-grus leucogeranus(pallas)
குருயிஃபார்மிஸ்” எனப்படும் இனத்தொகுதியின் கீழ் வரும் சைபீரிய கொக்கு ,ஒரு சதுப்பு நிலப் பறவை ஆகும்.பறப்பதற்கேற்ற உடலைப்பு இல்லாவிடினும்,நீரிலும் நிலத்திலும் நன்கு வாழும் திறம் கொண்ட்து.வடக்கு சைபீரியாவிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகிறது.பீஹாரின் வடபகுதி ,உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்பூர் ஜீல் மற்றும் பரத்புரில் உள்ள “கிலாடியோ கானா தேசியப் பூங்கா” ஆகியவற்றுக்கு நவம்பர் மாத இருதியிலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் சேர்கிறது. பின்னர் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் பகுதியில் மீண்டும் சைபீரியா நோக்கிப் புறப்படுகிறது.

சைபீரியா கொக்கு ,பனிபடர்ந்த  வெண்ணிறமான இறகுகளையும் ,தலையின் முன் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் சிவப்பு நிறத்தையும் கொண்டிருக்கும்.இறக்கையின் சில இறகுகள் கருமையாக இருக்கும்.உலகில் உள்ள சைபீரியா கொக்குகளின் எண்ணிக்கை சில நூறுகளே என்பதால், இதனை காகும் பொருட்டு அகில உலக அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


1950 முதல் 1970 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் பரத்பூர் பகுதிக்கு குளிர்காலத்தில் 100 சைபீரியா கொக்குகள் வருவதுண்டு.நாளாவட்டத்தில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து 1989,90,91 ஆண்டுகளில் முறையே 22,14,7 சைபீரிய கொக்குகளே வந்து சென்றன.பருவ மழை சரிவரப் பெய்யாமையும் ,அவ்வப்போது தோன்றும் வறட்சியும் இதற்குக் காரணமாக தெரிகிறது.பரத்பூர் தேசியப் பூங்காவில் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதால் நீர்த்தாவரங்கள் அதிகமாகி இப்பற்வைகளால் நீரின் கீழிறுக்கும் கிழங்குகளை எட்டி தின்ன முடியவில்லை.இப்பூங்கவிற்க்கு  வரும் சைபீரிய கொக்குகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP