புதியதலைமுறை முதல் ஆண்டு.-- 1

>> வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012


 புதிய தலைமுறை  முதல் ஆண்டு...


புதிய தலைமுறை முதல் ஆண்டு... எழுத்தாழுமை மாலன் அவர்களை ஆசிரியராக கொண்டு இதழாய் மக்களின் கைகளில் இளமையாய் நுழைந்தது. புலனாய்வு இதழ்கள் சக்க போடு போட்டு காசு பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் அதிகம் டேபிள் ஜேர்னலிசம் கொஞ்சம் மக்களின் குறிப்பாக இளையவர்களின் மனதில் உள்ள சே இதை திருந்த முடியாது என்கிற பிரச்சனைகளை மையப்படுத்தி வெளிவந்து மக்கள் மனதில் நச் என்று இடம் பிடித்தது. குறிப்பாக ஒரு இதழுக்கு காட்சி ஊடகத்தில் நாள் முழுவதும் விளம்பரம் கொடுத்து நாளிதழ்களிலும் நல்ல விளம்பரம் கொடுத்து கும் என்று வந்திருங்கினார்கள். எஸ் ஆர் எம் என்னும் பலதுறை வியாபார நிருவனத்திடம் இருந்து மிகுந்த பணபலம் உள்ள பின்புலத்தில் இருந்து பிறந்ததால் இதழுக்கு உள்ள பணப்பிரச்சனை இதற்கு இல்லை என்பது இதற்கு கூடுதல் வரப்பிரசாதம்.

மக்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி தக்க சமயத்தில்  அதாவது கடந்த ஒரு வருடம் முன் காட்சி ஊடகத்திலும் செய்தி சேனலை ஆரம்பித்து களத்தில் குதித்தார்கள்.இந்த சேனலை தொடக்கத்தில் ஊடக மன்னர்கள் கண்டு கொள்ளவில்லை.எல்லா சேனல்களை போலவே இவர்களும் இருப்பார்கள் என்று நினைத்தார்கள். அதே நேரத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதும் வசதியாக போய்விட்ட்து எஸ் ஆர் எம் குழுவுக்கு.பொதுவாக இவர்களின் தலைவர் பாரிவேந்தரின் கட்சியை முன்னிலைப்படுத்தும் என்று தான் ஊடகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலோர் நினைத்தார்கள்.ஆனால் நட்ந்த்தோ... முற்றிலும் வேறு!!
மங்கிய காட்சி,சொன்னதை திருப்பி திருப்பி சொல்லும் ம்னோபாவம்,நான் சொலரது தான் செய்தி ,தனக்கு வேண்டாதவர்களின் நல் செய்தியை மட்டுப்படுத்துவது என்று தான் பெரும்பாலும் செய்தி சேனலகள் இருந்து வந்தன அதுவரை. மேலும் செய்தி சேனல்க்கு என்று இருந்த நவீன மனோபாவங்கள் ஒன்றும் இல்லாத மொக்கை சேனலகள் மத்தியில் கம்பீரமாய் கடையை விரித்த்து புதிய தலைமுறை. சேனல் ஆரம்பிக்கும் முன் டெக்னிக்கல் விசய்ங்களில் இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நல்ல முயற்சி. முதல் முறையாக HD முறையில்..துள்ளிய காட்சிகள்... இளைமை பட்டாளம் .. என்று புதிய கனவுகளோடு களம் இறங்கினார்கள்.
பொதுவாக சிவப்பு,ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்கள் அதிகம் கண்களை ஈர்க்கும். பொதுவாக ஜரோப்பிய மற்றும் ஸ்கேண்டி நாடுகளில் இந்த கலரை அதிகம் பார்க்கலாம்.இதற்க்கு முன்னால் மிகமுக்கியமான விசயத்தை சொல்லனும்.. இது வரை உள்ள அனைத்து செய்தி சேனலகளும் பொதுவாக தங்கள் கொள்கைகளை ,நிகழ்ச்சிகளை தங்களது ஒட்டு வங்கியிடம் சேர்க்கும் எண்ணத்தில் மனதில் வைத்தே ஆரம்பிக்கப்பட்ட்து. இதில் நடுநிலைமை என்னும் பெரும்பானமை வாக்காளர்கள் ,மக்களை கவரதற்கு எந்த சேனலும் நினைக்கவில்லை. அல்லது தெரிவில்லைய???
அந்த நடுநிலை மற்றும் புதியதாக(ஒவ்வொரு தேர்தலிலும் 7 முதல் 10 சதவீதம் புதிய்தாக ஓட்டு போட வாக்குசாவடிக்கு வருகிறார்கள்) ஒட்டுப்போடும் இளையவர்களை மனதில் வைத்து அவர்களையே ஆடியன்ஸாக வைத்து தான் புதியதலைமுறை களம் இறங்கியது.  சபாஷ்.. நல்ல சிந்தனை,
களம் இறங்கியாச்சு.. போன ஆக்ஸ்ட் 24.. வந்து என்ன செய்தார்கள்....
முதலில் அந்த வண்ணம்,துள்ளியம்,இளமை போன்றவற்றால் மக்களுக்கு அட என்று திரும்பி பார்த்தார்கள். குறிப்பாக காலையில் 15 நிமிட நேரடி நிகழ்ச்சி நல்ல கான்சப்டா இருந்த்து. எல்லோருக்கும் பிடிச்சது . செய்திதாள்களில் வரும் செய்திகளை இருவர் அலசுவது ..ஜென்ராம் வழங்கிய நிகழ்ச்சி. பேச்சு சம்பந்தப்பட்ட தமிழ்நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குபவர் அதிகம் பேசிக்கொண்டிருந்த போது குறைவான பேச்சு அதுவும் நேரடியாக என்றவுன் எல்லோருக்கும் சட்டுனு பிடிச்சது....அட என்று எல்லோரும் உற்று கவனிக்க ஆரம்பித்தார்கள்...அடுத்து இறக்கினாங்க பாருங்க....அது..


கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.... சும்மா சொல்லக்கூடாது. பா.ராகவன் எழுதிய புத்தகம் ஊ... வெளிவந்த போது சக்கை போடு போட்ட புத்தகம் கிழக்கு வெளியீடு. அதை அப்படியே பா,ரா திரைகதை எழுத ஹரி தொகுக்க... சும்மா ஆரம்பத்திலெ இருந்து ஜிவ்னு பத்திகிச்சு... முதல் பாலில் சிக்ஸ்ர் அடிச்ச மாதிரி.. அட்டகாசம் பன்னிடாங்க... இப்ப தான் மக்கள் டே இவங்க என்ன்மோ நல்ல பன்றாங்கடா என்று நிமிர்ந்து உடகார்ந்து பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க...இதை தக்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசனையில் தலையை பிச்சுட்டு இருக்கப்ப... கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்ட லஷ்மி இவங்க மடியில் வந்து அமர்ந்த அந்த சம்பவம்....சென்னை என்கவுண்டர் மேட்டர்...
துக்குடா கேமராவை.. அடரா லைவ்வை... அடிச்சாங்க.. பாருங்க... எல்லோரும் புதிய தலைமுறை சேனலை வைச்சு கண்ணு எடுக்காமா பார்க்க வைச்சாங்க... அந்த தகவலை முதல் முறையா சொன்னவங்க இவங்கதான்.. காலையில் 4 மணிக்கு சூப்பரா முதல் பைட்டை மக்களுக்கு காட்டிடாங்க.. அதை பக்கவா பிடிச்சு நல்ல கிராபிக்ஸ் செய்து சும்மா புலனாயவு பத்திரிக்கைகள் தோர்த்து போகும் அளவுக்கு நல்ல கதை சொன்னாங்க... மக்களும் பாட்டி சொன்ன கதையை கேட்கர மாதிரி .. அப்படியே மகுடிக்கு மயங்கும் பாம்பாய்.. மயங்கிட்டாங்க புதிய தலைமுறையிடம்..
.....கரண்ட் போயிருச்சு... கொசுக்கடி தாங்க முடியலை...இன்னும் எடிட் செய்யலை... கரண்ட் வந்த பிறகு கதையை சொல்ரேன்... ஒகேவா...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP