அழிவின் விழிம்பில்..-53

>> வியாழன், 2 ஆகஸ்ட், 2012


கறுப்புக் கழுத்துக் கொக்கு
Black necked crane-grus nigricollis(przevalski)

கருப்பு கழுத்து கொக்கு ,லடாக் பகுதியில் ஏப்ரல்/மே முதல் அக்டோபர் வரையிலான இனச் சேர்க்கை கால்ங்களில் தென்படும்.அருணசாலப் பிரதேசம் மற்றும் பூடானில் செப்டம்பர் முதல் மார்ச் வரை காணப்படும்.பழுப்பு கலந்த கருமையான நீண்ட கால்களும் கன்ன்ங் கரேலென்ற கறுப்பு நிறக் கழுத்தும் கொண்டு ஒரு மீட்டர் வரை உயரம் இருக்கும்.பொதுவாக உடல் மங்கிய சாம்பல் நிறத்துடன் வாலில் தொங்கிய நிலையில் கருமையான இறகுகளுடன் இருக்கும்.


தானியங்கள் ,வேர்கள்,கிழங்குகள் பூச்சிகள் மற்றும் சிறிய முதுகுத் தண்டுள்ள பிராணிகளை ,கருப்பு நிறக் கழுத்து கொக்கு உணவாக்க உட்கொள்ளும். லடாக்கில் இனச் சேர்க்கை பருவம் முடிந்த்தும் தனது குஞ்சுகளுடன் ,குளிர் காலத்தில் வெப்பக் பகுதிகளை நோக்கி புறப்படும்.
அழிவுக்கு இலக்காகி இருப்பதால் இப்பறவை வன உயிர் பாதுகாப்பு சட்டம் அட்டவனை -1 ல் பாதுகாக்ப்பட வேண்டிய பறவையாக அங்கரீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏறக்குறைய 2100 க்கும் அதிகமான பறவைகளின் உயிரின வகைப்பிரிவுகள்/துணைப் பிரிவுகள், மற்றும் இங்கே குறிப்பிடப்படாத பறவைகள் பேரழிவுக்கு இலக்காகி உள்ளன.வெண்சிறகு மரவாத்து, பெருஞ்சீட்டி நன்னீர் வாத்து.அந்தமான் நன்னீர் வாத்து,இமயமலை கழுகு,நிக்கோபார் பெரும்கால் பறவை,மலபார் இருவாட்சி ஆகியன குறிப்பிட்த்தக்கவை.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP