அழிவின் விழிம்பில்..-31

>> வெள்ளி, 27 ஜூலை, 2012


நாலு கொம்பு மான்
Four-Horned Antelope-Tetraccrous quadricornis(blain ville)

நாலு கொம்புமான்கள் ,பிளவுபட்ட குளம்புகள் கொண்ட அசை போடும் பாலூட்டி வகையைச் சார்ந்தவை.இவற்றுக்கு நன்கு வளர்ச்சியுற்ற கண்பார்வை ,நுகர்ச்சி மற்றும் கேட்கும் செவித்திறன் இருப்பதால்,மிகவும் வேகமாக செல்லக்கூடியவை.


கொம்பு மான்க்ளில் இந்த வகை நாலு கொம்பு மான் மிகவும் வித்தியசமானது.ஆண் மாண்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த நான்கு குறுகிய கூர்மையான கொம்புகள் இருக்கின்றன.முன்புறமாக அமைந்துள்ள முதல் சோடி கொம்புகள் 5 முதல் 6 செ.மீ நீளம் கொண்டு குமிழ் போன்று குறுகி இருக்கும்.பின்புறமுள்ள 2 வது சோடி கொம்புகள் நீளம் 12 செ.மீ இருக்கும்.இதன் உடல் 1 மீட்டர் நீள்மும்,தோள்பட்டை உயரம் 60 செ.மீ வர இருக்கும்.உடலில் காணப்படும் மெல்லிய குறுகிய மென்மயிர், மேற்பகுதியில் செம்பழுப்பாகவும் ,கீழ்ப்பகுதியில் வெண் பழுப்பாகவும் தோன்றும்.ஒவ்வொரு காலுக்கு முன்புறமும் கருநிறப் பட்டை காணப்படும்.முன்னங்கால்களில் இப்பட்டை அகலமாக இருக்கும்.
தீபகற்ப இந்தியாவில் மேடு பள்ளங்கள் நிறைந்த மலை பகுதிகளில் நாலு கொம்பு மான்கள் தென்படுகின்றன்.இவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை.நீரைப் பருகும் பொருட்டு இவை ஒற்றையாகவோ சோடிகளாகவோ நீர் நிலைகளுக்கருகில் காணப்படும்.  


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP