புரியாத புதிர்!!

>> வியாழன், 26 ஜூலை, 2012


ஆண் வேட்டையாடினான்,பெண் சேகரித்தாள் .ஆண் பாதுகாத்தான்,பெண் பராமரித்தாள்.இதன் பலனாக அவர்களது மூளையும் உடலும் எதிர் எதிர் திசையில் பரிணாமம் அடைந்தன.
குறிப்பிட்ட வேலைகளுக்குகேற்ப அவர்களுடைட உடல் பரிணாமாம் அடைந்தபோது கூடவே அவர்களுடைய மனமும் மாறியது .பல ல்ட்சக்கனக்கான வருடங்களில் ஆN பெண் மூளைகள் வேறுபட்ட வழிகளில் தொடர்ந்து பரிணாம்ம் அடைந்தன.இப்போது தகவல்களை அலசி ஆராய்ந்ததில் ஆணும் பெண்ணும் வேறுவேறு விதமாக செயலபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் வேறு வேறுவிதமாக சிந்திக்கிறார்கள்.
என்பதுகளில் இருந்து ஆணுக்கும் பெண்ணுற்கும் உள்ள வேறுபாடுகள், ஆண்-பெண் மூளைகள் செயல்படும் விதங்கள் பற்றி தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன்.பரந்து விரிந்த மனித மனதினுள் நுழைந்து பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.இவை அனைத்துமே ஒரே விசயத்தை சுட்டி காட்டுகின்றன.எல்லாமே சமமானவை அல்ல. ஆணும் பெண்ணும் வேறு வேறு.இந்த வேற்றுமைகளுக்கு காரணம் சமுக திணிப்புகள்தான் என்று 20ம் நூற்றாண்டில் விளக்கப்பட்டது.
நமது பெற்றோர் ,ஆசிரியர்களின் மனோபாவங்களினால்தான் நாம் உருவாகிறோம்.அவர்கள் பதிலுக்கு சமூகத்தின் மனோபாவங்களால் உருவானவர்கள்.
பெண் குழந்தைகளை பொம்மைகளோடு விளையாடவிடுகிறோம்.ஆண் குழந்தைகளுக்கு ராணுவீரன்,துப்பாக்கி,போன்ற பொம்மைகளோடு விளையாடுகிறார்கள்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் மனம் தூய கரும்பலகையைப் போலிருக்கிறது.அதன் மேல் ஆசிரியர்கள் ,தங்கள் தேர்வுகளை ,விருப்பங்களை எழுதலாம் என்றுதான் சமீபகாலம் வரை நம்பப்பட்டு வந்தது.
நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட வித்த்தில் சிந்திக்கிறோம் என்பது பற்றிய வேறுபட்ட கருத்துகளை கூறும் உயிரியல் சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.
நமது ஹார்மோன்களும் ,மூளை கம்பி இணைப்புகளும்தான் ந்மது மனோபாவங்கள் ,தேர்வுகள்,நடத்தைகளை பெரும்பாலும் முடிவு செய்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஒரு தனியான தீவீல் ஆண் குழந்தைகளையும் ,பெண் குழந்தைகளையும் வளரவிட்டால் கூட ,பெற்றோரோ ,சமூகமோ வழிகாட்டாவிட்டால் கூட பெண்குழந்தைகள் கட்டி அனைத்து ,தொட்டு ,தோழிகளை உருவாக்கும். பொம்மைகளோடு விளையாடும்.அதே சமயம் ஆண் குழந்தை மற்ற குழந்தைகளோடு மனத்தாலும் உடலாலும் போட்டியிட்டு ஏற்றத்தாழ்வுகள் உள்ள குழுக்களை உருவாக்கும்.
நாம் பிறப்பதற்கு நீண்ட காலம் முன்பே நாம் எப்படி சிந்திக்கிறோம் செயலபடுகிறோம் என்பதை நமது மூளையில் எப்படி நரம்புகள் பின்னியிருக்கின்றன,நமது ஹார்மோன்கள் எப்படி உடலில் ஊடுருவுகின்றன என்ற இரண்டு காரணங்கள்தான் தீர்மானிக்கின்றன.குறிப்பிட்ட சூழல்களில் நமது உடல் எப்படி செயல்புரியும் என்பதை தீர்மானிக்கும் உள்ளுணர்வுகள் நமது ஜீன்கள்தான்.
ஆணும் பெண்ணும் சமமா என்பது அரசியல் நியாய அடிப்படையில் கேட்கப்படவேண்டிய கேள்வி.அவர்கள் ஒன்று போலிருக்கிறார்களா என்பது விஞ்ஞானபூர்வமான கேள்வி.

நமது உயிரியல் , நமது நட்த்தையை பாதிக்கிறது என்ற கருத்தை எதிர்ப்பவர்கள் பால் வேற்றுமையை எதிர்ப்பவர்கள்.ஆனால் இரண்டு வேற்பட்ட விஷயங்களான சமத்துவத்திற்கும் ஒத்தன்மைக்கும் உள்ள வேற்றுமை பற்றிஅவர்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.
முன்ன்னி தொல்பொருள் இயலாளர்கள், இனவியலாளர்கள், உளவியலாளர்கள், உயிரியலாளர்கள், நரம்பியலாளர்களின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சந்தேகமோ விருப்பு வெறுப்போ இல்லாமல் ஆணுக்கும் பெண்ணுற்குமான மூளை வெறுபாடுகள் இப்போது தெளிவாகிவிட்டன.
வேறுபாடு என்பது சமத்துவதிற்கு எதிர்சொல் அல்ல.சமத்துவம் என்பது நாம் செய்யவிரும்பும் செயல்களைத் தேர்ந்தெடுக்க ந்மக்கு சுதந்திரம் இருப்பது.வேறுபாடு என்பது ஆண்களும் பெண்களும் ஒரே விஷ்யங்களைச் செய்ய விரும்ப மாட்டார்கள் என்பதுதான்.  

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP