அழிவின் விழிம்பில்..-33

>> வெள்ளி, 27 ஜூலை, 2012


காஷ்மீர் மான்
Kashmir Stag or hangul-Cervus Elaphus hanglu(Wanger)
ஹங்கல் என்றழைக்கப்படும் காஷ்மீர் மான் உருவத்தில் சற்றும் பெரியதாகவும்,பிளவு பட்ட கொம்புகளைக் கொண்டும் காணப்படும்.ஒவ்வொரு கொம்பிலும் 5 முதல் 6 வரை கிளைக் கொம்புகள் இருக்கும்.உடலின் நிறம் இலேசான அல்லது திண்ணிய பழுப்பு நிறமுடையதாகவும் பிட்டத்தில் வெள்ளைத் திட்டும் காணப்படும்.உடம்பின் இரு புறமும் கால்களிலும் நிறம் மங்கித் தோன்றும்.முகவாய்க் கட்டையும் காதுகளும் வெண்ணிறத்தில் காணப்படும்.

காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் வடபகுதி மற்றும் இமாசலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா பகுதியில் உள்ள ஆற்றும் படுகையை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் காஷ்மீர் மான்கள் 2 முதல் 18 வரை எண்ணிக்கையுள்ள குழுக்களாகத் தென்படுகின்றன.காஷ்மீரில் 10 ,000 அடி உய்ரமுள்ள ‘தாட்சிகாம்’ பகுதியில் இவை இருக்கின்றன.வெயிற்காலங்களில் மந்தைகளாகச் சேர்ந்து கீழ்நோக்கி வ்ந்துவிடும்.துரதிர்ஷ்டமாக இம்மானகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.நடப்பு நூற்றாண்டின் ஆரம்பத்தில் 5000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கத்தில் குறைந்துவிட்டது  

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP