அழிவின் விழிம்பில்..-35

>> வெள்ளி, 27 ஜூலை, 2012


கஸ்துரி மான்
Musk deer-moschus moschiferus(Linnaeus)
ஆண் கஸ்தூரி மானுக்கு வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்புலுக்கு அருகே தோலுக்கடியில் ‘மஸ்க்’ சுரப்பி இருப்பது அதன் சிறப்பு.இனச் சேர்க்கை பருவத்தில் பெண் மானைக் கவரும் பொருட்டு ,இந்த மஸ்க் சுரப்பியிலிருந்து நல்ல மணம் வீசும்.இனச் சேர்க்கை நேரங்களில் மட்டும் ஆண் கஸ்தூரி மான்கள் பெண் மான்களுடன் காணப்ப்டும்.பிற சமயங்களில் தனியாகவே தென்படும்.பக்லில் ஒளிந்து கொண்டிருந்துவிட்டு இரவில் உணவை தேடி திரிந்து உண்ணும் .கூர்மையான தலை,பெரிய காதுகள்,சிறிய வால்,கொம்புகள் இல்லாமை ஆகியவை கஸ்தூரி மானின் சிறப்புக்களாகும்.ஆன் மானுக்கு ஒரு சோடி தந்தங்கள் உண்டு.இதன் தோலில் பழுப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட மென் மயிர் காணப்படும்.இப்போதுள்ள மான்க்ளுக்கு எல்லாம முன்பே தோன்றி கஸ்தூரி மான்,காஷ்மீர் முதல் அருணாசலப்பிரதேசம் வரையிலான உயர்ந்த மலைகளில் வாசம் செய்கிறது.இது மரப்பாசிகள்,பெரணிகள்,பூக்கள்,இலைகள்,மற்றும் புற்களை உண்டு வாழ்கிறது.தோள்பட்டை உயரம் 50 செ.மீ உயரம் வரை இருக்கும்.இவற்றின் உடலமைப்பு கச்சிதமாகவும் காலகள், பனி படர்ந்த வழுக்குகின்ற பாறைகள் நிறைந்த இடங்களில் நடப்பதற்கேற்றவாறு வலுவுடன் குளம்புகளைக் கொண்டிருக்கும்.
வாசனைத் திரவியங்களை தயார் செய்ய உதவும் மஸ்க் சுரப்பிகளைப் பெறும் பொருட்டு கஸ்தூரி மான்கள் இரக்கம்ற்ற முறையில் கொல்லப்படுவதால் இவற்றின் என்ணிக்கை வெகுவாக குறைந்து பேரழிவிற்கு இலக்காகி இருக்கின்றன.  

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP