நாயம்ம்ம்மாரே....!!!- காற்றில் ஒலிக்கும் குரல்

>> வியாழன், 20 ஜூன், 2013




நாயம்ம்ம்மாரே....!!!- காற்றில் ஒலிக்கும் குரல்


புலிப்பொருளாதாராம் !!உலகெங்கும் புலியின் பெயரால் நடைபெறும் வணிகம் மட்டும் பல்லாயிரம் கோடி!  50 பைசா தீப்பெட்டி முதல் ஆயிரம் ஆயிரம் கோடிகளில் புரளும் விளையாட்டு போட்டிகள் வரை ராயல்ட்டி கேட்காத புலிகளை வைத்து நடைபெறும் வியாபாரம்!! அட்சயபாத்திரமாய் இருந்தும் புலிகள் அழிவின் உச்சத்தில் இருப்பது மனித இனத்தின் அடங்காத அத்தனைக்கும் ஆசைப்படும் நோக்கம் தான்!!கட்டற்ற சுரண்டலால் காலாவதியகிறது அப்பாத்திரமும்!!
உலகெங்கும் புலிகளை காக்க பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தாலும் இப்புவியில் புலிகளின் எண்ணிக்கையும் சரி.. அவை வாழும் பரப்பும் சரி குறைந்து கொண்டே வருவது பூமிபந்தின் அழிவின் குறியீடு!! இந்நிலையில் சத்தியமங்களம் வனப்பகுதியை மத்திய அரசு புலிகள் சரணாலயமாக அறிவித்துள்ளது!! 

வருடம் முழுவதும் இதமான காலநிலை !எங்கு திரும்பினாலும் பசுமை!செவிகள் இனிக்கும் பற்வைகளின் இசை!கண்கள் வியக்க காணுயிர்களின் உலா! மனதை மயக்கும் அமைதி!இப்படி வியப்பு பரவசம் உற்சாகம் என்று மலைக்கவைக்கும் பிரதேசம் சத்தியமங்களம் வனப்பகுதி! மேற்கு மலைத்தொடரும் கிழக்கு மலைத்தொடரும் சங்கமிக்கும் பூமி! மோயாறு பள்ளத்தாக்கில் ஆரம்பித்து திம்பம் மலை வரை. 1400 ச.கிமீ பரப்பளவு..

பிலிகிரிரங்க வனவிலங்கு சரணலாயம்,முதுமலை மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்காக்களை இணைக்கும் பகுதி. யானைகளின் முக்கிய வலசை பாதை. வனவிலங்குகளின் தொட்டில் எனஅழைக்கப்படும் மிக முக்கிய  தெங்குமராஹாட்டா உள்ளிட்டது.பிளாக் பக் என்னும் அரிய மான் இங்கு தான் அதிகமாக காணப்படுகிறது.மாநிலத்தின் மையப்பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதராமான பவானி மற்றும் மோயாறு செழித்து பாயும் பகுதி.

2004 க்குப் பிறகு இக்காடுகளில் மரக்கொள்ளை ,வேட்டை என்று அச்சுருத்தல் அதிகம் ஆயின.ஊடுருவலும் தனியார் ஆக்கிரமிப்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கியது.பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கையின் விளைவாக 2008 லில் நவம்பர் 3 ம் தேதி இப்பகுதியின் பல்லுயிர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 அடிப்படையில் வனவிலங்கு சரணலாயமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வன உயினங்களின் கணக்கெடுப்பில் ஒவ்வொருமுறையும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது.இதனையடுத்து அவ்வப்போது புலிகள் சரணலாயமாக இப்பகுதியை அறிவிக்க சொல்லியும் எதிர்த்தும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.அதிகரித்து வரும் புலிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு  1,ஏபரல் ,2010லில் தமிழக அரசு சத்தியமங்களம் வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் சரணாலயமாக மாற்ற முன்முயற்சிகள் எடுக்கப்படும் என அறிவித்தது.

15, ஜூலையில் மத்திய அமைச்சர் ஜெய்ராம ரமேஷ் அப்போதைய தமிழக முதல்வர் கருணாவிற்கு சத்தியமங்களம் வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் சரணாலாயமாக மற்றுவது குறித்த சாத்தியபாடுகளை பரிந்துரைக்குமாறு கடிதம் எழுதினார். ஏனோ பிந்தைய காலங்களில் இத்திட்டம் மெளனம் மட்டுமே சாதித்தது. 2010லில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பில் இப்பகுதில் 46 புலிகள் இருப்பதாக சொல்லப்பட்டது.

2011 லில் WWF , புகைப்படம் , எச்சங்கள் மற்றும் மரபணு மாதிரி அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குறைந்தப்டசம் 28 புலிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. புலிக்குட்டிகள் தவிர.மேலும் சுமார் 1000  யானைகள்,700 காட்டெருதுகள்,30 சிறுத்தைகள்,2500 புள்ளி மான்கள்,1000க்கும் மேற்பட்ட அழிவின் உச்சத்தில் இருக்கும் பிளாக்பக் மான்கள்,இவை தவிர குரைக்கும் மான்,நான்கு கொம்பு மான்,காட்டுப் பன்றி ,கரடி, செந்நாய் என பல்லுயிர் வளம் செழிக்கும் பகுதி என கணக்கெடுப்புகள் முலம் உறுதிசெய்யப்பட்டது. இதனையொட்டி 2012 ஏபரல் மாத்தில் புலிகள் சரணாலயத்திற்கான  வரைவு திட்டத்தை மாநில அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு  அனுமதி மற்றும் சிறப்பு உதவிகளுக்காக அனுப்பியது. இதற்கிடையில் மாநில சட்ட சபையில் வைக்கப்பட்டு உறுப்பினர்கள் பரிந்துரைகளும் கேட்கப்பட்டது.. 
ஒரு வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கும் முன் மக்கள் கேட்பு கூட்டங்களை கூட்ட வேண்டும் என்பது விதி. அதற்கேற்ப மக்களின் விருப்பங்களை கேட்கும் கூட்டத்தை சத்தியமங்களத்தில் மாவட்ட நிர்வாகம் நடத்தியது. இதில் அப்பகுதிமக்கள் பலத்த எதிர்ப்பை வெளிகாட்டினர்.தீவிர போராட்டங்களும் நடைபெற்றது.

வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டால் அந்த பகுதியில் வளர்ச்சி என்ற பெயரில் எதுவும் செய்யப்படமாட்டது.அப்பகுதிவாழ் மக்கள் தவிர பொதுமக்கள் முறையான அனுமதியின்றி நுழைய இயலாது.அனுமதியோடு நுழைந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும்.சமுக விரோத செயல்கள் கட்டுப்படுத்தப்படும். இப்படி ஒரு பக்கம் வனம் காக்கப்படும் என்றாலும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிகப்படும் என்கிறர்ர்கள் மற்றொரு சாரர்.

காடுசார் பொருட்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்த நிலப்பரப்பு உரிமை பறிக்கப்படும் என்கிறார்கள் சுற்றுச்சூழலியலர்கள் ஒருசாரர்.இதற்குப் பதில் அளிக்கும் மற்றொரு சாரரோ பழங்குடிகளின் மிகமுக்கிய பிரச்சனை கல்வியும் மருத்துவமும்.அங்கே பணியில் அமர்த்தப்படும் அரசு ஊழியர்கள் பெரும்பாலோர் பணிகளுக்கு சரியாக வருவதில்லை. காரணம் உயிர் பயம்!!

பழங்குடிகளுக்கு வன உயிரின்ங்களை  பற்றி நன்கு தெரியும். அவை எப்போது எந்த பாதையில் பயணப்படும் என்பது போன்ற உயிரினங்களை பற்றிய அறிவு.. ஆனால் நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு அது தெரியாது. உயிர் பயத்தால் அவர்கள் பணிகளுக்கு வருவதில்லை. இது போன்ற.சமுக வாழ்வியல் பிரச்சனைகளை விட்டு விட்டு புலிகள் சரணாலயமாக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது.இவர்களும் நகரத்திற்கு விருப்பப் பட்டு வனத்தை விட்டு இடம்பெயர்ந்தால் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் புலிகள் பாதுகாப்பு திட்ட்த்தில் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் தருகிறது மத்திய அரசு என்கிறர்ர் புலிகள் சரணால்யத்தை வரவேற்கும் ஆர்வலர்.

எதிர்ப்பும் ஆதரவும் சற்றே மவுனித்த நிலையில் மார்ச் 15 முதல் சத்தியமங்களம் வனவிலங்கு சரணாலயத்தை புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வறிப்பின் மூலம் தமிழ்நாட்டின் முதுமலை,களக்காடு முண்டந்துரை மற்றும் ஆணைமலையை தொடந்து நான்காவது புலிகள் சரணாலயமாக சத்தியமங்களம் வரலாற்றில் இடம்பெற்றது.

மயக்கும் மஞ்சள் வரிக்கோடுகளுடன் அழிவின் உச்சத்தில் உள்ள இந்த கூச்ச சுபாவம் உள்ள காணுயிர்க்கு 1.40 லட்சம் ஹெகடரில் இன்னொரு பாதுகாப்பிடம் கிடைத்துள்ளது.அதே நேரத்தில் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் கோள்விக்குரியாகி விடக்கூடாது என்பதையும், புலிகளைக் காப்பாற்றிய அரசு  மறந்துவிடக்கூடாது!!!!

காணுயிர் மேல் காட்டும் கரிசனத்தை எங்கள் மேலும் கட்டுங்கள் என்கிற பழங்குடிகளின் குரல் காற்றில் கரைந்துவிடக்கூடாது.மானிட இனமும் இயற்கையும் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு இணைந்து வாழும் காலம்.....பூவுலகின் பொற்காலம்!!

நன்றி:தமிழ் ஆழி.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP