அழிவின் விழிம்பில்..-30

>> புதன், 25 ஜூலை, 2012


சதுப்புநில மான்
Swamp dear-cervus duvaceli(g.cuvier)
கிளைகள் கொண்ட கொம்புகளுடன் அழகாக காணப்படுவதால் சதுப்பு நில மான் ,இந்தியில் பாரஹ் சிங்கா என்றழைக்கப்ப்டும் சிறப்பு வயந்த விலங்காகும்.இதற்கு அழகிய உரோமம் நிறைந்த தோல் இருப்பதால் இதன் உடல் மினுமினுப்பாக காணப்படுகிறது,வெயில் காலத்தில் இதன் நிறம் மங்கிவிடும். அவ்வப்போதுகொம்புகள் உதிர்க்கப்படுவதால் புதிய கொம்புகள் வெல்வெட் துணி போன்ற மென்மையான தோலுடன் தோன்றும். முதிர்ச்சி அடைந்த்தும் கொம்புகள் கெட்டிப்படுவதால் இனச் சேர்க்கை காலங்களில் தோலுறைகள் உதிர்ந்து விடும்.

இம்மான்கள் அடர்ந்த புற்களை உண்டு வாழும் பொதுவாக ஒரு மந்தையில் 30 முதல் 50 மான்கள் வரை காணப்படும்.ஆயினும் சிலவற்றில் நூற்றுக்கணக்கிலும் இருப்பதுண்டு .ஆண்மான்கள் இனச் சேர்க்கையின் போது மட்டும் பெண் மான்களுடன் சேர்ந்து காணப்படும். இனச் சேர்க்கை முடிந்தவுடன் ஆண்மான்கள் பெண் மான்களை விட்டு விட்டு வெளியேறி இதர ஆண்மான்களுடன் மந்தை அமைத்துக்கொள்ளும்.சில மான்கள் ஏகாந்த வாசிகளாக மாறிவிடும்.பெண் மானகள் தமது குட்டிகளுடன் சேர்ந்து மந்தை அமைத்து கொண்டு நன்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் சுற்றிகொண்டிருக்கும். வயதான இன்னும் இனச்சேர்க்கை செய்யவல்ல ஒரு பெண்மானே இம்மந்தையின் தலைவர்.
வடக்கு மற்றும் கிழக்கிந்திய பகுதிகள் ,உத்திரப்பிரதேசம் ,அஸ்ஸாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் அல்லது வறண்ட புலநிலங்கள் நிறைந்த பகுதிக்ளில் சதுப்புநில மானகள் வாசம் செய்கின்றன. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP