எவர்கீரீன் தயிர் சாதம்.

>> செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

என்னதான் எத்தனையோ வெரைட்டி சாதம் இருந்தாலும் சரி….அல்லது எத்தனை விதமான ருசியான உணவு உண்டாலும்சரி….இது இல்லாமல் ஒரு திருப்தி கிடைக்காது. இறுதியில் இரண்டு வாய் கவளம்கிடைத்தாலே போது.அப்போது தான் உண்டவனுக்கு உணடதன் திருப்தி. அப்படி என்ன உணவு???
குழந்தையாய் இருக்கும் போதே நமக்கு அறிமுகம் ஆகும் வெகு சில உணவில் முனனியில் இருப்பது.ஆம் …தி கிரேட் தயிர் சாதம். இதனை அடித்துக்கொள்ள இதுவரை எந்த டெசர்ட்டும் இல்லை!!
இன்றைய விருந்துகளில் ..பப்பேகளிலும் சரி ..பந்தியிலும் சரி…தயிர்சாதம் இல்லாமல் இல்லை.சுமார் 20..25 அண்டுகளுக்கு முன் வரை தயிர் சாதம் என்பது உடல் நிலை சரியில்லாமல் போனாலோ…வயிறு சரியில்லாமல் போனாலோ கிடைக்கும். குறிப்பாக அம்மை நோய் கண்ட காலத்தில் நோய் கண்டவருக்கு தயிர் மற்றும் மோர் சாதம் தான். ஆனால் தற்போது அது அந்தஸ்த்தின் அடையாளம். எப்படி மாறிவிடுகிறது மனிதனின் உணவு பாழக்கம். பல நேரங்களில் என்னை ஆச்சர்ய்படுத்தும் விசயம் இதுதான்.மனிதன் விசித்திரமானவன்.
இடைப்பட்ட காலத்தில் சிறு சிறு உணவகங்களில் மதியம் மட்டும் பொட்டலத்தில் தயிர் சாதம் கிடைக்கும்.ஆத்திர அவசரத்திற்கு ….அலுவலகத்திற்கு மதிய உணவு கொண்டு போகாத நாட்களில் தயிர் சாதம் தான் பலருக்கும். ஆபத்துபாந்தவன்!! இதிலும் சிலர் உண்டு…சுவரசியமாக சாப்பிடுவார்கள்….அது தயிர் சாதமும் வாழைப்பழமும். வெளுத்து கட்டுவார்கள். இந்த காம்போ நானும் ருசித்துப்பார்த்தேன். ஒரு பேஷனான காம்போ!!குழந்தைகளுக்கு பலர் இப்படி ஊட்டுவதை பார்த்துள்ளேன்.
பின்னர் விஷ்வருபம் எடுத்தது தயிர் சாதம்… பப்பே கொஞ்சம் தலை காட்டி ஆங்காஙகே தலைகாட்டிய போது இறுதியில் சாதம் தனியாக வைத்து தயிர் தனியாக வைத்து அதை ஸ்பூனால் எல்லாம் எடுத்து சாப்பிட்டால் அந்த திருப்தி கிடைக்காதால்… அந்த குறையை போக்க தயிர் சாதமாக நேரடியாக பப்பே பாத்திரங்களில் இடம்பிடித்தது. அதுவும் இந்த தலைமுறையில் உருவான டிபன் மற்றும் சாதம் கலந்த விருந்தோம்பல் முறை தயிர் சாதத்தை எங்கையோ தூக்கிக்கொண்டு போய் விட்டது.
ஆம் நம் விருந்தோம்பல் முறை என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. அதாவது  காலை மதியம் இரவு என்று. பொதுவாக காலை  என்றால் சிற்றுண்டியும் மதியம் மற்றும் இரவு என்றால் சாப்பாடும் தான் நம் விருந்தோம்பல் முறை. காலப்போக்கில் வாழ்வியல் மாற்றங்கள்…அனைத்து வேளைகளிலும் சாதம் மற்றும் டிபன் வகைகள் இடம் பெற்றுவிட்டன.இன்று காலையில் கூட வெஜிடபிள் அல்லது காளான் பிரியாணியோடு மெனுக்கள் படம் காட்டுகின்றன. பொதுவாக காலையில் தயிர் சாதம் பரிமாறப்படுவதில்லை. அதற்குப்பதிலாக தயிர் சேமியா சில திருமனங்களில் பரிமாறப்படுகிறது.
பொதுவாக தயிர்சாதம் என்றால் பச்சரிசியில் தான் செய்யப்படுகிறது. சாத்த்திற்கு எப்போதும் வைக்கும் தண்ணிரை விட கொஞ்சம் அதிகமாக வைத்து நன்கு குலையவிட்டு எடுத்து அதில் தயிரை கலப்பது ஒருவகை. இதில் பால் சேர்ப்பது இன்னொரு வகை.ஆனால் மிதமான சூடான சாதத்தில் தயிர் மட்டும் கலப்பது தான் அருமையான தயிர் சாதம். அப்போதே சாப்பிட வேண்டும்…நேரம் ஆக ஆக இருக ஆரம்பித்துவிடும். அதுவும் தயிர் சாதத்தில் கொஞ்சம் சின்ன வெங்காயம்…பச்சைமிளகாய் போட்டு தாளித்த தயிர் சாதம்…..கூட தொட்டுக்கொள்ள மோர் மிளகாய் அல்லது  மாங்காய் ஊறுகாய் ….இரண்டும் சேர்ந்து சாப்பிடும் கிடைக்கும் ஆன்ம திருப்தி…அந்த ருசி… நிகர வேறு எதுவும் இல்லை.
அருமையான புளிக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு இருந்தால்….ஆஹா…முதலில் தயிர்சாதம் கிடைக்குமா என்று பாருங்கள். தயிர் சாதத்தை இலையில் போட்டுக்கொள்ளு்ங்கள்….ஓரத்தில் ..அதன் அருகில் உங்களின் சாப்பிடும் கை பக்கமாக கொஞ்சம் வத்தக்குழம்பு அல்லது புளிக்குழம்பை ஊற்றிக்கொள்ளுங்கள்..இப்போது உஙக்ள் விரல் கொண்டு கொஞ்சம் தயிர் சாதத்தை தனியாக பிரித்து அதை குழம்பில்  கொஞ்சம் எடுத்து  இரண்டையும் கலந்து வாயில் ஒரு விள்ளல் போட்டுப்பருங்கள்… …வாழ்வின் உன்னத தரிசனத்தை அந்த நொடியில் உணர்வீரக்ள். பார்த்து ..ஜாக்கிரதை ..அப்போது உங்கள் சொத்தை யாராவது எழுதி வாங்கிக்கொள்ளப்போகிறார்கள்….. சுவை அப்படி சாமியோவ்!!
அப்ப தயிர்சாதத்திற்கு அசைவ காம்போ இல்ல்லையா என்று அசைவ பிரியர்கள் சண்டைக்கு வராதீங்க…. அசைவ குழம்பான மட்டனோ ..சிக்கனோ வகைக்கிர அன்று தயிர் சாதத்தில் கொஞ்சம் குழம்பை கலந்து அடித்துப்பாருங்கள். கொஞ்சம் மட்டுமே…அந்த வெண்மை நிறம் மாறி இருக்கனும் அந்த அளவுக்கு மட்டும் குழம்பு இருக்கனும். இது எனக்கு ருசிக்க அறிமுகப்படுத்தியவர் என் தாத்தா.. என் பால்ய வயதில் கூட்டுக்குடும்பம். அப்போது என் தாத்தா அசைவ குழம்பு எல்லாம் சாப்பிட்ட பிறகு அவரின் தட்டில் தயிர் விட்டு சாதத்தில் கொஞ்சம் குழம்பையும் கலந்து தருவார்.சில வாய்கள் மட்டும் தான் கிடைக்கும். என்ன ருசி….என் தாத்தா காலத்தில் கரைந்து போனாலும்..இன்னும் என் நினைவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக நானும் அவ்வாறே அசைவ குழம்பு வைத்த அன்று வீட்டில் உண்பது வழக்கம். இப்போது இந்த கலவை சாதத்திற்கு என் செம்பாதியும் என் குழந்தையும் காத்திருப்பார்கள்.பல நாட்கள் இந்த தயிர்சாதம் குழம்பு கலவையை கலந்த எனக்கே கிடைக்காது .இரண்டு பேரும் ஆட்டைய போட்டுவிடுவார்கள். தொடர்கிறது பல தலைமுறை  பந்தம்!!

இந்த குழம்பு கலவையில் ஹைலைட் என்றால் அது மீன் குழம்பும் தயிச் சாதமும் தான்…ருசியில் அடித்துக்கொள்ள எதுவும் அருகில் நெருங்க முடியாது.அதுவும் புளி கொஞ்சம் அதிகமாக ஊற்றிய குழம்போ அல்லது மாங்காய் போட்டு குழம்போ….இன்னும் ரம்மியமாக இருக்கும். அந்த புளிப்பு இல்லாத பிரஷ் தயிரில் புளிப்பு கலந்த மசலா கலவை ….அதுவும் மீன் ஊறி ..அதன் ருசியும் இறங்கிய அந்த குழம்பும்…இரண்டும் சேர்ந்து க்லந்து கிடைக்கிர ருசி………பூலோகமே சொர்க்கம் தான்!!

இன்னும் ருசிப்போம்…  


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP