வடை ,போண்ட,பஜ்ஜி-1

>> திங்கள், 2 பிப்ரவரி, 2015

உளுந்துவடை..பருப்பு வடை,கீரை வடை,மாவு போண்டா,கீரை போண்டா,..இப்படி போனாலும் பஜ்ஜியில் தான் அதிகம் வெரைட்டி. சரி முதலில் வடையை பார்ப்போம்.வடையில் டாப் என்றால் கீரை வடைதான்.இதுக்கும் சிறப்பு ஸ்டேட் வங்கி  நுழைவு வாயிலில் ஒரு வண்டிக்கடையில் சாப்பிட்டேன். இவர் காலையில் வடை போண்ட பஜ்ஜி எல்லாம் போட்டாலும் இவரிடம் இரண்டு தான் பேமஸ். ஒன்று கீரை வடை மற்றும் கீரை போண்டா. தொட்டுக்கொள்ள பெரும்பாலும் கடைகளில் மாலை வேளையில் தான் சட்னி தருவாரகள். ஆனால் இவர் பகலிலேயே தந்தார்..அதுவும் நல்ல குவாலிட்டியான வெங்காயம் மற்றும் தக்காளி கலந்த சட்னி. பட்டையகிளப்பு போண்டாவுக்கு. மனிதர் இப்ப தனியே சிவரஞ்சனிக்கு ஓட்டலுக்கு எதிர்புறம் உள்ள தெருவில் தனி கடையே போட்டுவிட்டார். முதலில் வடையை சட்னி தொட்டுக்கொண்டே சாப்பிட்டு விட்டு பிறகு சூடாக போண்டா பக்கம் போய்....சட்னியில் துவைத்து சாப்பிட்டு விட்டு இறுதியில் இவரிடம் இருக்கும் தயிர் வடையில் ஆனியன் போட்டு ஓரத்தில் கொஞ்சம் கெட்டி சட்னி வைத்து அடித்தால்....ஆஹா..கிடைக்குமே... ஒரு திருப்தி!!! இது இப்படி என்றால் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள கடையில் கிடைக்கும் ருசி.......!!!


இன்று ஒரு பதிவு படித்தேன். இரண்டு மெதுவடை மூன்று மைசூர் போண்டா ஒரு கப் அல்வா ..இதற்கான பில் தொகை சுமார் 140 ரூபாய். சென்னையில்.அப்பாடியோ!! இன்றும் நான் சாப்பிடும் கடையில் வடை போண்டா பஜ்ஜிகளின் விலை 3 ரூபாய் தான்.இதே கடையில் சில நாட்கள் முன் விலை வாசியை காரனம் காட்டி விலையை ஏற்றினார்கள். 5 ரு என்று .சைஸூம் கொஞ்சம் பெரியதாக மாற்றினார்கள்..சில நாட்கள் தான் ....... வியாபாரம் டல்லோ டல்!! மீண்டும் இப்போது பழைய விலைக்கே!! இத்தனைக்கும் கொல்லம்பாளையம் பகுதியில் டீ யுடன் சேர்ந்து பலகாரம் போடும் நல்ல கடைகள் இல்லை. இப்போது ஒரு பேக்கரி சூடு பிடிக்கிறது.
இந்த விலை நிலவரத்திற்கே இப்படி என்றால்.. பரிமளம் காம்பளக்ஸுக்கு எதிர் புறம் உள்ள ரோட்டில் புரோபசனல் கொரியர் தாண்டி வரிசையாக மூன்று வண்டிக் கடைகள் இருக்கும் . இங்கே ஒரு வயதான தாத்தா பாட்டி கடை நடுவில் இருக்கும் .பெரும்பாலும் இவருக்குதான் வாடிக்கையாளர்கள். காரணம் எனக்கு தெரிந்து ஈரோட்டின் பழமையான வடை போண்டா மாஸ்டராக இருப்பார்.இந்த வண்டிக்கடை வைத்தே சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம். அப்ப கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.இதில் என்ன இன்னொரு ஆச்சர்யம் என்றால் இவரிடம் வடை போண்டா இன்றும் 50 பைசா தான். நான் தற்போது போய் சில மாதங்கள் ஆகிறது. இவரிடம் கிடைக்கும் சட்னி வேறு மாதிரியாக இருக்கும் .தக்காளி சட்ணிதான் ..ஆனால் தண்ணிருடன் இருக்கும் .அதில் பலகார தூள்களை சேர்த்து இருப்பார். தனித்த சுவை.
மாலையில் ஸ்வஸ்திக் கார்னரில் சத்தி ரொடு திரும்பும் போது ஒரு வண்டிக்கடை இருக்கும் .இதுவும் அப்போது மிகவும் பிரபலம்.சுமார் 15 வருடஙக்ளுக்கு முன்.அப்போது அலுவலகத்தில் தினம்தோரும் மாலையில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று சிறு பலகாரங்கள் வாங்கித்தரனும்.அப்போது இங்கே தான் வாங்குவோம்.வடை போண்ட இரண்டுமே சுவையாக சட்னியுடன் இருக்கும்.இப்போது இந்த கடை இருக்கிறதா என்று பார்க்கனும்.


ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் பல கடைகள் உண்டு. ஆனால் அவ்வளவாக ருசித்தது இல்லை. ஏதாவது சில சமயம் மட்டும் உண்டு. ஆனால் அந்த பகுதியில் பிரபலமானது பிரைட் ரைஸ் நுடுல்ஸ் வண்டி கடைகள். பல ஆண்டுகளுக்கு.முன்பே..இப்போது போல சைனீஸ் கடைகள் இல்லை. நான் சொல்வது 20 ..25 ஆண்ட்டுக்ளுக்கு முன்...அப்போது நானும் என் நண்பன் முருகேஷும் சிக்கய நாய்க்கர் கல்லூரி அருகே ஒரு அண்ணாச்சி சைனீஸ் அயிட்டங்களுக்கு வண்டி கடை போட்டு இருப்பார்.... அங்கே தான் சாப்பிடுவோம். அந்த ருசி எல்லாம் இப்போது சுத்தமாக இல்லை.அதுவும் அந்த ரைஸூக்கு ஒரு வெஜ் குருமா ஒன்று தருவார் பாருங்கள். இரண்டையும் காம்பினேட் பன்னி சாப்பிட்டா ....திவ்யமாக இருக்கும்....வடைக்கு வருவோம்...பிறகு இன்னொரு நாள் இந்த சைனீஸ் கச்சேரி வைத்துக்கொள்வோம்.
தற்போது ஐய்யபவிலாஸ் கீழேயும் வடை போண்டா போடுகிரார்கள். மாலை வேளையில். குவலிட்டியாக இருக்கிறது.இரண்டு வகை சட்னி..பனியாரமும் உண்டு. பொதினா சட்னி இங்கே உண்டு.கூட்டமும் ஒரளவு பரவாயில்லை.ஆனால் கிருஷ்ணா தியேட்டர் முன்புறம் கொஞ்சம் தாண்டி ஒரு கணவன் மனைவி வண்டி கடை போட்டு இருப்பார்கள். இதுவும் ஈரோட்டின் பழமையான கடை. எப்போதும் ஒரே ருசி.இவருக்கு பள்ளிபாளையத்தில் இருந்து எல்லாம் வாடிக்கையாளரக்ள் வடை போண்டா சாப்பிடவும் பார்சல் வாங்கவும் வருப்வார்கள். குறிப்பாக இவர்களின் போண்டா செம பிரபலம். எப்போதும் வண்டி கடையில் கூட்டம் சும்மா அம்பும்.காத்திருந்த்து தான் சாப்பிடனும்.இவர்களின் சட்னி ருசியும் மாறுபாடானது. கொஞ்சம் காரம் அதிகமான தக்காளி சட்னி. கலக்கலாக இருக்கும். இந்த பகுதியில் இருக்கும் வட நாட்டினருக்கு இவரின் வண்டி கடை ஆஸ்தானம். கூடுதல் விசயம் இவரின் மகன் என் நண்பர். இவரின் பட்டப்பெயரே போண்டா என்று தான் கூப்பிடுவார்கள். நல்ல டைப். இவரிடம் பல முறை கேட்பது உண்டு...ஏம்பா உங்க அப்பா பன்ற வியாபாரத்தை கற்றுகொள்ளாமே... நல்ல வியாபாரம் ..என்றால் மனிதர் பிடி கொடுக்காமல் நலுவி விடுவார்.. காலம் மாறிவிட்டது. நானாக இருந்தால் அந்த வண்டிக்கடையை தான் என் வணிகமாக மாற்றி இருபேன்.
தற்போது என் நண்பர் மாலை வேளையில் எட்டு மணியளவில் இருந்து கடையை பார்த்துக்கொள்கிறார்.

தொடரும்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP