அழிவின் விழிம்பில்..-40

>> ஞாயிறு, 29 ஜூலை, 2012


நீலகிரி வரையாடு
Nilgiri tahr-hinitragus hylocrius-ogilby


இமயமலை வரையாட்டுடன் தொடர்புள்ள நீலகிரி வரையாடு தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே வகை மலை வெள்ளாடு ஆகும்.திண்ணிய உடலமைப்புடைய இது நல்ல விரை திறனும் கொண்டது.பாறை மலைப் பகுதிகளில் வாழத் தன்னை தகவமைத்து கொள்ளும் திறமை படைத்தது.இளமையில் சாமபல் அல்லது பழுப்பு நிறமாகவும் இருக்கும் உடல் நிறம் வயது முதிர்ந்த்தும் கருமையாகி விடும்.பெட்டை மட்டும் குட்டி ஆடுகள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.நன்கு வளர்ச்சியடைந்த வரையாட்டிற்க்கு முதுகில் நரைத்த திட்டு போன்ற அமைப்பும் கழுத்தில் குறுகிய பிடரி மயிறும் காணப்படும்.தலையின் பின்புறம் தோன்றும் ஒரு சோடிக் கொம்புகள் இணையாக எழும்பி பின்பக்கம் வளைந்து நெருக்கமாக குறுக்கு வாட்டில் செல்லும் திரைவுச் சுருக்கங்கள் கொண்டு தோற்றமளிக்கும்.

தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளிலும் கேரளாவில் உள்ள ஆனைமலை பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1300 முதல் 2600 மீட்டர் உயரமுள்ள சில தனிபடுத்தப்பட்ட பகுதிகளிலும் நீலகிரி வரையாடுகளை காணலாம்.இவை 5 முதல் 50 எண்ணிக்கை கொண்ட மந்தைகளாக குட்டிகளுடன் காணப்படும்.இவற்றுக்கு இனச் சேர்க்கையென்று குறிப்பிட்ட பருவம் கிடையாது.ஒரு பெண் வரையாடு ஒரு ஈற்றில் இரண்டு குட்டிகள் ஈனும்.

இறைச்சிக்காக வேட்டையாடுவதாலும் ,ஊண் உண்ணும் விலங்குகள் இவற்றை கொன்று தின்று விடுவதாலும் ,உறைவிடங்கள் மாறுதலுக்கு ஆளாவதாலும் இவ்வரையாடுகள் அழிவுக்கு இலக்காகி இருக்கின்றன.ஓரினக் காடு வளர்ப்பு,தோட்ட பயிர்கள் சாகுபடி ஆகிய செயலகள் ,வரையாடுகளின் இயற்கை உறைவிடங்களை மாற்றிவிடுகின்றன்.எனவே இவற்றுக்கு தேவையான பசும்புல் நிலங்கள் மாற்றத்துக்குள்ளாகி இவற்றின் வாழ்வையே நாசமாக்கி விடுகின்றன. 

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP