லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 10 செப்டம்பர், 2012





லவுட்ஸ்பீக்கர்.
அதகளம்
இந்த வருட்த்தின் மிக மோசமான விபத்தாக சிவாகசி பட்டாசு ஆலை விபத்து கருதப்படுகிறது.உயிர்களை பற்றிய அக்கறை இனமை,பாதுகாப்பற்ற ஆலை சூழல் போன்றவையே விபத்தின் காரணம்.இவை இத்துறையில் மட்டும் அல்ல ..நமது அனைத்து ஆலைகளிலும் இதுதான் உண்மை நிலை. அரசு பட்டாசு ஆலையில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் அனைத்து தொழிற்சாலைகளிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.

கில்லி
கூடங்குளம் பிரச்சனை நீதிமன்ற விவகாரத்திற்கு பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரசோ அடுத்து வர இருக்கும் தேர்தலை நினைத்து கொஞ்சம் அமைதி காக்கிறது.இதில் திடிரென்று ஜெ வை உள்ளே நுழைத்திருப்பது அரசியல் அரங்கில் அனைவராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது.சுமார் 15 ஆயிரம் கோடி என்னவாக போகிறது என்பது உலகம் முழுக்க உற்று கவனிப்படுகிறது.உதய்குமார் கில்லி தான்!!யாருக்கு???

வேதாளம்
மீண்டும் சமுக வலைத்தளங்கள் மற்றும் டுவிட்டர் போன்றவ்ற்றை தடை செய்ய அரசு தீவிர யோசனையில் இருக்கிறது.கட்டற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ள இவைகளை அரசு வதந்தி பரப்புகின்றன என்ற போர்வையில் அமுக்க நினைப்பது மிகுந்த கண்ட்ணத்திற்கு உரியது. தனிக்கைக்கு உடபடுத்தலாமே தவிர தடை என்பது அரசின் பயத்தை வெளிப்படுத்துகிறது.

பூச்சாண்டி
தேர்தல் வருமா வராதா என்றால் வரும் ஆனால் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் படம் காண்பிக்கிறது அரசு.அவ்வளவு சீக்கிரத்திலோ அல்லது முன்பே தேதலை சந்திக்க காங்கிரஸ் தயராக இல்லை என்பதே நிதர்சனம். பிஜேபி இதையும் கேடய்மாக பயன்படுத்த நினைகிறது.வரும் நாடாளுமனற தேர்தலில் மாநிலக் கட்சிகள் சக்கை போடு போடப்போகின்றன். அதுமட்டும் உறுதி.

ஊடகம்.
முழுநேரம் காட்சி ஊடகத்தில் பணியாற்றுவது என்பது என் நெடுநாளைய எண்ணம். பல நிருவணங்களிடமும் தொடர்ச்சியாக முயன்றும் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. ஆனால் சில நாட்கள் முன் ஒரு காட்சி ஊடகத்தில் இருந்து நேரடி நிகழ்ச்சி நட்த்த அழைப்பு வந்துள்ளது . வியாழன் அன்று ஸ்கிரீன் டெஸ்ட்க்கு போகிறேன்.இதுதான் நான் கலந்து கொள்ளும் ஊட்கத்திற்கான கடைசி தேர்வு என்று முடிவு செய்துள்ளேன்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..வென்றால் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணிக்கு உங்கள் முன்னறையில் நான்..


1 பின்னூட்டங்கள்:

Sudhakar M 11 செப்டம்பர், 2012 அன்று PM 5:55  

அருமையான தகவல் கதம்பம்...

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP