கொடுமையிலும் கொடுமை.......

>> வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012



 கொடுமையிலும் கொடுமை.......

2000 வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 4 ஆண்டுகள் என் பணி முழுவதும் காடு சார்ந்தே இருந்தது.வீட்டுக்கு வருவது என்பது மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை. அதுவும் சில மணி நேரங்கள் மட்டுமே. பெரும்பாலும் சத்தியமங்களம் மற்றும் மேற்கு மலைத்தொடரிலே பெரும்பாலான நேரம் என் வாழ்வு கழிநத்து. அப்போதுதான் காடு மற்றும் காட்டியிர் பற்றிய புரிதல் ஏற்பட்ட்து.அது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிசமே.சுமார் 500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சேமித்து வைத்துருந்தேன்.. என் நன்பன் சிவா எல்லாத்தையும் ஒரு நாள் லவட்டி விட்டான். அப்போது தெரியாது இப்படி தமிழுக்கு சோதனை தரும் வகையில் நான் எழுத ஆரம்பிப்பேன் என்று.
அந்த அனுபவம் அந்த பணியில் இருந்து 2004 வெளிவந்த பிறகும் எனது ஆர்வம் தொடர காரணமாக இருந்த்து. புத்தகங்கள் வேறு முழுவீச்சில் படிக்க ஆரம்பித்து இருந்தேன். இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ்நாடு மட்டும் அல்ல பல புதிய நன்பர்கள் அறிமுகமாக ஆரம்பித்தனர்.அப்போது அறிமுகம் ஆனவர் தான் ரிச்சட்.சென்னை கஸ்டம்ஸில் உயர் பணியில் இருப்பவர்.அருமையான மனிதர்..ஏதாவது இந்த இயற்கையை காப்பாற்ற நம்மால் முடிந்த்தை செய்யவேண்டும் உந்துதலோடு இருப்பவர்.அவரின் தொடர் முயற்சியால் காட்டுயிர் குறித்து ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்னும் சொல்லாடல் நன்பர்களின் மத்தியில் உருவானது. மிகுந்த விவாத்திற்கும் தொடர் அலசல்களுக்குப் பிறகும் ரீடர்ஸ் டைஜிஸ்ட் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுயிர் குறித்த செய்திகளை ஒரே இட்த்தில் கிடைக்கும் வித்த்தில் டைஜிஸ்ட் இதழ் ஆரம்பிக்க முடிவு செய்தோம். மிகுந்த ஆலோசனைக்கு பிறகு அதன் பெயர் “மழைக்காடு “ என்று பெயரும் மழைக்காட்டுக்கே உரித்தான் தவளை அதன் லோகவாகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட்து.

வணிகரீதியலான பத்திக்கையாக இருக்க்கூடாது என்பது விவாதத்தின் போது முடிவு செய்யப்பட்ட்தால் விளம்பரம் வாங்கவோ பிரசரிக்கவோ கூடாது என்பதையும் முடிவு செய்தோம். உடனடியாக பத்திரிக்கையை முறைப்படி பதிவு செய்ய அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.

பத்திரிக்கைக்கான வேலைகள் அனைத்தும் பகிர்ந்தழிக்கப்பட்டு அவரவருக்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்ட்து. முழுவீச்சில் வேலைகள் நடைபெற்றது. பணத்திற்கு ரிச்சட் முழு பெருப்பேற்றுக்கொண்டார். அதுபோக ஒவ்வொருவரும் அவர்களால் ஆன உதவியும் செய்ய முடிவுசெய்யப்பட்டது.இதழ் தனி இதழாகவும் வருட சந்தா அடிப்படையில் விநியோகிக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்ட்து.
2006ம்வருட்த்தின் இறுதிப்பகுதியில் முதல் இதழ் தயாரானது. நான் எடிட்டோரியல் குழுவில் இடம் வகித்தேன்.முதல் இதழ் வந்த போது பலராலும் பாராட்டப்பட்டது.இந்திய டுடே மற்றும் தமிழின் பல இதழில் எங்களின் இதழைப்பற்றி எழுதி பரவலான கவனத்திற்கு வித்திட்டது.தொடர்ந்து காலாண்டிதழாக வெளிவரத்தொடங்கியது. இந்திய் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சந்தாவும் பல பக்கம் இருந்தும் வர ஆரம்பித்தது.
இந்த சமயத்தில் அத்தனை ஊடகங்களுக்கும் நமது இதழ் போய் சேரவேண்டும் என்று கருத்து வலுப்பட்ட்து. அதற்குரிய பணிகளை முழுவீச்சில் எடுத்து செல்லப்பட்ட்து. அதற்கான பணியில் அத்தனை ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் முகவரிகளை சேகரிக்கும் பணியை நான் ஏற்றேன்.
ஒருநாள் காலையில் தின்மலர் அலுவலகத்திற்கு சென்றேன் ..அவர்களின் அத்தனை முகவரிகளையும் வாங்குவதற்காக!அப்போது ஈரோடு அலுவலகத்தில் அவரிகளின் உரிமையாளர் மஞ்சுளா மேடம் இருந்தார்.நான் வரவேற்பு ஊழியரிடம் விசயத்தை சொல்ல அவர் எம்.டியிடம் கேட்க .,அவர் என்னை அவரின் கேபினுக்கு வரவழைத்து என்ன விசயம் என்று கேட்க ..பேச ..பேச சுமார் 2 மணிநேரங்கள் இயற்கையை பற்றி உரையாடிக்கொண்டு இருந்தோம். அவர் எங்களின் பணியைப் ஒரு நேர்முகம் ஒன்று கொடுங்கள்.. நாங்கல் பிரசரிக்கிறோம். என்றார். அதற்கு நான் எங்களை பற்றி வேண்டாம் இயற்கையின் அவசியத்தை பற்றி தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பத்திரிக்கையில் பதிவு செய்யுங்கள் என்றேன். அதற்கு அவர் நீங்களே எழுதுங்கள்.. அதை நாங்கள் பிரசரிக்கிறோம். என்று சொல்லிவிட்டார்..
அட..இது என்னடா புள்ளையார் பிடிக்க போய் புலியை பிடித்த கதையாய் ஆயிற்றே என்று கருதி உதவி ஆசிரியர் கல்பானா அவர்களிடம் என் சூழ்நிலையை சொல்ல அவர் நீங்கள் எழுதிக் கொடுங்கள் நான் எடிட் செய்து மாற்றிக்கொள்கிறேன் என்றார். அப்படி எழுதினது தான் என் முதல் பத்தி யானைகளை பற்றி....அது ஆச்சு நடந்து 5 வருடம்..அப்ப எழுத ஆரம்பித்தவுடன்.. கலபானா தொடர்ந்து எழுதுங்க சார் என்று சொல்ல எழுத ஆரம்பிச்சது தான்.. இப்ப இங்க வந்து இப்படி உங்களிடம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்....

குறிப்பு:இடையில் SWG ஆசியாவிற்கான கான்பிரன்ஸ் கலந்துகொண்ட வாய்ப்பு ம்ற்றும் அனுபவம்..பசுமைதாயகத்திற்கு எழுத வந்த சுவரசிய கதை எல்லாம் அடுத்த பதிவில்...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP