அழிவின் விழிம்பில்-6
>> சனி, 21 ஜூலை, 2012
ஹூலாக் கிப்பான்(அ) வெள்ளை புருவக் குரங்கு
(hoolock gibbon-hylobates hoolack (harlan))
இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கினம் ஹூலாக் கிப்பான்.வாலில்லாக் குரங்கு இனங்கலிலே மிக அருமையாக குட்டி கரணம் அடிக்க கூடியது.உடல் முழுவ்தும் கருமையான முடி.வட்ட வடிவமான முகம் புருவத்தில் வெண்ணீறப் பட்டை நீண்ட கைகள் வால் இல்லாமை ஆகியவை இதன் உடலமைப்பு.இதர்க்கு வளையத்தக்க தோள்பட்டை இருப்பதால் கைகளை நனகு அசைக்க முடியும்.இதன் நீணட கைகள் கொக்கிகள் போல மரக்கிளைகலை பிடித்து கொள்ளும்.மரக்கிலையை ஒரு கையினால் பற்றிக்கொண்டு ஊசாலாடிக் கொண்டே மற்றொரு கையால் அடுத்த கிளையை பற்றிக்கொள்ளும் அழகே தனி!!ஒரே தாவலில் 3 மீட்டர் நீள தூரத்தை கடந்து விடும்.காட்டு மரங்களினூடே இவ்வாறு தாவிச் செல்லும் இதன் வேகம் அசாத்தியமானது.தாவுதற்க்காக கிளையைவிட அதிக உயரத்தில் ஊசலாடி தனது கைகளை மேலெழுப்பி உடலை முன் வைத்து அடுத்த கிளையைப் பற்றிக் கொள்ளும்.

இந்தியாவில் வட கிழக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் ஹூலாக் கிப்பான் காணப்படுகிறது.இது பங்களாதேஷ் பர்மா சீனா ஆகிய நாடுகளில் சில பகுதிகளிலும் காணப்படுகிரது.பழங்கல் இழைகள் பூக்கள் மற்றும் பூச்சிகளை உண்டு வாழ்கிறது.இதன் குடும்பம் அளவான சிறு குடும்பம். ஒரு ஆண் ஒரு பெண் மற்றும் மூன்று அல்லது நான்கு குட்டிகளே இருக்கும்.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக