சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒருவேளை உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.......

>> திங்கள், 19 நவம்பர், 2012


 ஒருவேளை உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.......

நீண்ட காலத்திற்குப் பிறகு சமீபத்தில் பணி நிமித்தமாக மேற்குமலைத்தொடர் நகரங்களுக்கு செல்லவேண்டிய வாய்ப்பு கிட்டியது.நகரங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் மக்களால் கொல்லப்பட்டு வருகிறது என்பதை நிதர்சனத்தில் உணர்ந்து மனசுக்கு வலியை ஏற்படுத்தியது.சுற்றுலா என்ற பெயரில் மக்கள் நகரங்களை விரைவாக அழித்துக்கொண்டிருப்பது வரப்போகும் பேராபாத்தை அறிந்தா? அறியாமாலா?
சுமார் 15 வருடங்கள் முன் வரை சுற்றுலா என்பது கல்வி சுற்றுலா மற்றும் ஆன்மீகச் சுற்றுலா மட்டுமே!பள்ளிகளில் அழைத்துச்செல்லும் கல்வி சுற்றுலாவும் வருடத்து ஒரு முறை குடும்பத்தினர் அழைத்துச்செல்லும் ஆன்மீக ஆலயங்களுக்கு  என்றும் இருந்தது.
90 களில் திறந்துவிடப்பட்ட பொருளாதாரா சந்தை அந்நிய நிருவணங்களை மட்டும் அழைத்து வரவில்லை. அவை புதிய பல சந்தைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.கூடவே மேலைநாட்டு கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் இங்கே புகுத்தியது.
திறந்துவிடப்பட்ட சந்தை கூடவே பொருளீட்டு வாய்ப்பையும் ஒரு சாரருக்கு அள்ளி கொட்டியது.எந்திரமயமான வாழ்வு,ஆதீத நுகர்வு கலாச்சாரம், உரையாடல் அற்ற வாழ்க்கை முறை போன்றவை இவர்களை இருகிய வாழ்வு நிலைக்கு உந்தி தள்ளியது.கடல் தாண்டி பயணம் செய்துவர்களின் சமீபத்திய தலைமுறை ஒற்றை நாற்காலியில் அமர்ந்து நாள் தோறும் வேலை செய்யவேண்டிய நெருக்குதல். இந்த அதீத நெருக்கடியை தவிர்க்க இந்த தலைமுறை வித்விதமாக சுற்றுலாக்களை தொடங்கியது.  ஆனால் இவை சுற்றுச்சூழலை மட்டுமட்டும் அல்ல சமுக நலத்தையும் மனித சூழலியலையும் குலைக்கப்போகிறது என்று யாரும் அறியவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் எல்லா “இஸங்களில்”லும் மோசமானது “டுரிஸம்” என்றார் ஜக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் பிரதிநிதி சத்ரூதீன் ஆகாகான்.1989லில் கூடிய உலக சுற்றுலா மாநாடு சுற்றுலாவின் மறுபக்கத்தை உலகிற்கு மனிலா அறிக்கையில் சுட்டிகாட்டியது.

சுற்றுலாவின் மூலம் அதிக அள்வில் சீர்கெடுவது மலைவாஸ்தலங்கள் தான். உதகையில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் தான்.அதுவும் சரணலாயங்களின் கதை கண்ணீர் கதைதான்!!ஒரு சரணலாயத்தில் இத்தனை விலங்குகள் தான் வாழ இயலும் என்று ஒரு கணிப்பு உண்டு.காட்டியிரியாளர்கள் இதை கேரியிங் கெப்பாசிட்டி என்பர்.இது அந்த வனத்தில் உள்ள தாவரங்கள்,இரைவிலங்குகள்,நீர் ஆதாரம் ஆகியவற்றை பொருத்த்து.இதைப்போலவே இத்தனை மனிதர்கள்தான்  ஒரு சமயத்தில் ஒரு சரணலாயத்தின் உள்ளே இருக்க முடியும் என்றொரு கணக்கும் உண்டு.இதன் அடிப்படையில் தான் உருவானது ஈகோ டூரிசம்.ஆனால் நம்மூரில் நடப்பது ஈகோ டூரிசமா?
ஒரு காட்டுக்குள் போகும்போது அடிப்படையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பளிச்சிடும் வண்ண உடைகளை அணியக்கூடாது இத்தகைய வண்ணங்களை பார்த்து வனவிலங்குகள் அச்சப்படும். இதுதவிர எந்த வாசனை திரவியங்களையும் பயன்படுத்த கூடாது.காட்டியிர்கள் அதீத மோப்ப சகதியின் மூலம் அறிந்து உங்களை விட்டு வெகுதொலைவில் சென்றுவிடும்.
சமீபத்தில் முதுமலையில் நான் பார்த்த சுற்றுலா குழுவினர் ஏதோ ஆடை அணிவகுப்பில் வரும் அளவுக்கு ஒப்பனைகளுடனும் வாசனை திரவியங்களுடனும் வலம் வந்தனர்.ஒரு வேளை அவர்கள்  வனவிலங்களுக்காக நடந்திருப்பார்களோ என்ற ஜயம் எனக்கிருந்த்து!!
வனத்திற்குள் பயணம் செய்யும்போது சத்தம் எலுப்பாமல் அமைதியாக சென்றால் தான் வனவிலங்களை தொந்திரவு செய்யாமல் காணமுடியும்.நம் மக்களோ அப்போது தான் வாகனத்தில் உச்சபடச சத்த்தில் இசையை ரசிக்கிறார்களாம்.. இதில் நடுவழியில் நிறுத்தி நடனமும் உண்டு!!உண்மையில் வ்னத்தில் வாகனத்தில் இருந்து இறங்கவே கூடாது. மேலும் கைகளை கூட வெளியே நீட்டக்கூடாது. ஆனால் நாம் இறங்குவதுதோடு மட்டும் அல்லாமல் நம் அத்தனை கழிவுகளையும் வனத்தில் இற்க்கிவைக்கிறோம். பிளாஸ்டிக் குப்பிகளில் ஆரம்பித்து உணவுப் பொட்டலங்கள் மலம் கழிப்பது வரை அனைத்தும். அது என்னவோ தெரியவில்லை இவர்களுக்கு  வனத்தை பார்த்தாலே அத்தனையும் செய்ய தோனுகிறது.!!இதன் அடிப்படை சகல உயிரின்ங்களும் தமக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கவே வாழ்கின்றன என்ற திமிர் எண்ணம்.
பெரும்பாலோருக்கு எந்த இட்த்தில் எப்படி நடக்கவேண்டும் அல்லது வேறுபாடு என்ன என்றே தெரிவதில்லை. உல்லாசப் பயணம் ,சுற்றுலா,வரலாற்றுச்சின்ன்ங்கள், விடுமுறையைகளிக்கும் இடம், ஆன்மீகத்தலங்கள் ,சரணாலயம் ஆகியவற்றிர்க்கு வேறுபாடு உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வதில்லை.
பல நாடுகளிலும் இப்போது சுற்றுலா குறித்து தீவிர நிலைப்பாடு எடுத்துள்ளனர். ஈகோ டூரிசம் வழியாக காட்டிற்கோ அல்லது காட்டுயிர்களுக்கோ சிறிதும் பாதிப்பின்றி சுற்றுலாவை முறைப்படுத்தியுள்ளனர். நம்மூரில் இதை எளிதாக சரணாலயங்களில் நட்த்தப்படும் சுற்றுலாவிற்கு ஈகோ டூரிசம் என்ற பெயரிட்டு சுற்றுச்சூழலை அழித்த்து தான் மிச்சம்.
நம்மவர்கள் ஈகோ டூரிசம் என்றால் கண்டிப்பாக சில வேலைகளை செய்வார்கள். அது முதலில் அங்கு இயற்கையாக உள்ள தாவரங்களை அழித்து ஒரு பூங்கா உருவாக்குவார்கள். அது சில வாரத்தில் தவறான நபர்களின் சொர்க்கபுரியாக மாறும். அடுத்து அந்த சூழலுக்கு ஒவ்வாத சில காட்டுயிர்களை கொண்டு வந்து காட்சிசாலை அமைப்பார்கள். மறக்காமல் ஒரு குட்டி ரயில் விடுவார்கள். அதை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பார். பிற்கு அந்த பகுதியில் ஒரு படகு குழாம்!!!இதில் பணியாளர்கள் எவரும் அப்பகுதியின் பூர்வகுடிகளோ அல்லது ஆதிகுடிகளோ இருக்கமாட்டார்கள்.!!!இது இல்லாமல் இறுதியாக ஒன்று செயவார்கள். அது கோடைவிழா நட்த்துவது. ஒரே நாளில் லடசக்கனக்கான மக்களை கூட வைத்து அந்த பகுதியே நாறடித்து விடுவார்கள்.விரைவில் அந்த பகுதி எதற்கு புகழ்வாய்ந்த்தோ அது எதுவும் அங்கே இருக்காது. இது தான் நமது நடைமுறை!!!
ஈகோ டூரிசம் இங்கேயும் மலர வேண்டுமானால் அனைத்து அரசு துறைகளும் இணைந்து பணியாற்றவேண்டும் . உள்ளூர் மக்களுக்கே பணியில் முதன்மை வாய்ப்பு அளிக்கவேண்டும். குறிப்பாக ஆதிகுடிகளின் அபாரமான இய்றகை அறிவை பயன்படுத்த வேண்டும்.சரணாலயங்களில் குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டுமே ஒரு அளவிற்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.இவைதவிர சரணாலயப்பகுதியில் தனியார் வாகணங்களை அனுமதிக்காமல் அரசே வாகன்ங்களை இயக்கவேண்டும்.மேலும் வாகனக்களுக்கு குறிப்பிட்ட தகுதிச்சான்றிதல் இன்றி அனுமத்திக்க கூடாது.சரணாலயங்களுக்கு பார்வையாளர்கள் முன் அனுமதியின்றி நுழைவதை முற்றிலும் தடுத்துவிடவேண்டும்.சிக்கிமிலுள்ள கஞ்ஜூன் ஜங்கா  சரணாலயத்தில் இகோ டூரியசத்தை சிற்ப்பாக கையாள்கிறார்கள். அவர்கள் செய்யும் போது நம்மால் இயலாதா??



1603 லில் கள்ளிக்கோட்டையிலிருந்து இங்கு வந்த ஜேம்ஸ் ஃபினினிசியோ என்ற சேசு சபைத் துறவி ஒருவர் தான உதகை என்னும் சொர்க்கபுரியை வெளியுலகிற்கு முதன் முதலில் தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்தே கோவையின் அப்போதைய ஆட்சியர் ஜான் சல்லிவன் பவானிகருகே இருந்த டணாயக்கன் கோட்டையிருந்து உதகைக்கு புறப்பட்டார். இந்த சொர்க்கபுரியை பார்த்து அதிசியத்தே தாமஸ் மன்றோவிற்கு கடிதம் எழுதினார்.சிறிய பாதையையும் அவரே முதன் முதலில் எற்படுத்தினார். அவருக்கு உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.....கண்டிப்பாக பாதை அமைத்திருக்கமாட்டர்!!! 
மதிப்பு போன நிலையைப் பூட்டி வைத்துக்காப்பாற்றவும் முடியாது.பிறர் பார்வையில் இருந்து மறைக்கவும் முடியாது.எல்லாம் ஒரு நாள் வீதிக்கு வரும்.வரும்போது அவரவர் கைத்தராசு எடுத்து எடைபோடும்.
கத்தரிக்க முத்துனா
சந்தைக்கு வந்துதான் தீரும்!!
சொற்களின் தாக்கத்தில் மயங்கிப்போவதும், சிந்தனை செய்! சிந்தனை செய்!! என்கிற அறைகூவளிலும் காலத்தை களித்தது போதும்... இது சிந்திக்க வேண்டிய நேரம் அல்ல... செயல்படுத்த வேண்டிய நேரம்!!இன்றே செய் நன்றே செய்!! 

Read more...

வேங்கை:மவுன யுத்தம்!!

>> திங்கள், 10 செப்டம்பர், 2012






மவுன யுத்தம்!
மனிதன் எப்போது துப்பாக்கி கண்டுபிடித்தானோ அன்றிலிருந்து காட்டுயிர்களுக்கு ஆரம்பித்துவிட்டது அழிவுகாலம்.முதலில் சிங்கத்தை குறிவைத்தான்.. விளைவு கிர் காடுகளில் மட்டுமே இன்று சிங்கம்!!அடுத்து புலி.. விளைவு 40 ஆயிரமாக இருந்த்து இப்போது 1200 மட்டுமே!!
சமீபத்தில் காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தன் சாட்டையை சுழட்டி உள்ளது. புலி சரணலாயங்களில் சுற்றுலாவை தடை செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.இது பல்வேறு விவாதங்களை நாடு முழுக்க கிளப்பியுள்ளது.
புலி என்ன அவ்வளவு முக்கியமான காட்டுயிரா??? இது பலரின் கேள்வி..இந்த புவியில் படைக்கப்பட்ட அனைத்தும் சங்கிலி போல ஒன்றை ஒன்று சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்டில் புலியே இல்லை என்றால் காடு இருக்காதா என்ன என்று நீஙகள் கேட்பது புரிகிறது.
இந்தியாவில் உள்ள காடுகள் வெவ்வெறு தகவமைப்பில் உள்ளது.புலி வாழக்கூடிய காடுகளில் யானை இருக்கும். யானைக்கு அதிகம் உணவு தேவை. ஒரு நாளைக்கு குறைந்தப்டசம் 250 கிலோ தாவரங்களும் நல்ல குடிதண்ணீர் வசதியும்.அப்படி என்றால் அந்த காட்டில் எவ்வளவு தாவரங்கள் மரங்கள் இருக்கும்...யோசித்துப் பாருங்கள்.குறிப்பாக மூங்கில்,முட்செடிகளில் வரும் காய்கள், புற்கள் என்பவை மிக முக்கியம் யானைக்கு.. மேலும் இத்த்கைய தாவர வளம் உள்ள காடுகளில் தான் மான் வாழும்.காரணம் புல் என்ற மிக முக்கிய உணவும் தண்ணீரும்.மான் மற்றும் யானைக்கு தேவைப்படும் கால்சியம் சத்திற்க்கு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் உப்பு மண்ணும் மிக முக்கியமானது .

யானை இவ்வகை காடுகளில் உட்புகுந்து உண்ணும் போது காட்டில் சிறு சிறு இடைவெளி உருவாகும்.அந்த இடைவெளிகள் மானுக்கு மேயும் இடமாகவும் இரை தேட வசதியாகவும் இருக்கும். புலிக்கு தேவையான உணவு குளம்பிகள் வகையை சார்ந்த மான் ம்ற்றும் காட்டு எருதுகள் இந்த வகை வளமான தாவர காடுகளில் தான் இருக்கும் புலியும் இக்காடுகளில் இருக்கும்.காரனம் இரை.இவ்வகையில் புலி ,யானை,மான் போன்ற குளம்பி வகைகள் நெருங்கிய சங்கிலியால் பினைக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை புலி வாழ்ந்த காடுகளில் புலி அற்றுப்போகுமானால் என்ன நடக்கும்..... புலியின் உணவான மான்,காட்டெருமை போன்ற தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.அவை உண்ணும் தாவரங்களின் அளவு அதிகமாகும் ..பிற்கு என்ன தாவர உண்ணிகளுக்கு சரியான அளவு உணவு கிடைக்காமல் அருகில் உள்ள மக்கள் வாழிட்த்திற்கு உட்புகும். மனித –காட்டுயிர் மோதல் நடைபெறும் .மேலும் சரியான அளவு தாவர உணவு கிடைக்காமல் காட்டியிர்களின் இறப்பு அதிகரிக்கும். யானை போன்ற விலங்குகள் உண்ணுவதில் 40 சதவீதம் செரிக்கின்றன. மீதி கழிவாக வெளியேறுகிறது. அதில் உள்ள சிறுவிதைகள் பாதி செரித்த அளவில் தான் எளிதாக முளைக்கும் .ஒரு பக்கம் தாவரங்கள் இப்படி காட்டுயிர்களால் உண்ணப்பட்டு மறுபுறம் கழிவு மூலம் வெளியேற்றப்பட்டு மீண்டும் அவை வளர்கின்றன்.தாவரங்கள் பரப்ப படுகின்றன. தாவரங்கள் பல்வேறு பகுதியிலும் பரவப்படுகின்றது. இப்படித்தான் காடு வளம் பெறுகின்றது .உருவாகின்றது. இதை அசைத்தால் காடு அழியும் என்ப்து இப்போது புரியும் உங்களுக்கு. காடு அழிந்தால் மழை இல்லை. மழை இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான தண்ணீர் கிடைக்காது. மனித இனமே அழியும்.
இதனால் தான் புலியை காப்பாற்ற காட்டுயிர் ஆர்வளர்கள் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு முயற்சியின் விளைவுதான் இந்த அதிரடி தீர்ப்பு.இதுவரை புலியை காப்பாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புலி பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் புலியை காப்பாற்றினார்களா என்றால் புலியின் எண்ணிக்கை குறைந்த்து தான் மிச்சம்.புலியின் பெயரை சொல்லிக்கொண்டு பலரும் தங்களின் சொத்தை பெருக்கிக்கொண்டார்களோ தவிர புலியின் எண்ணிக்கையை பெருக்கவில்லை.
தற்போது வந்துள்ள தீர்ப்பின் படி புலியின் சரணலாயங்களில் சுற்றுலாவாசிகள் தடை செய்யப்பட்டுள்ளனர்.இத்தீர்ப்பை பெரும்பாலோர் வரவேற்றாலும் சிலர் இதனை எதிர்கின்றனர். அவர்கள் சொல்வது இந்த காரணத்தை தான்.இதனால் சுற்றுலா தடை செய்யப்படுகிறது. சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் பாதிப்படைகின்றனர் என்பது.
தமிழ்நாட்டில் உள்ளது மூன்று சரணாலயங்கள் தான் .அவை முதுமலை,களக்காடு மற்றும் ஆணைமலை. இதில் புலிகள் அதிகமாக இருப்பது முதுமலையில் இருந்து சத்தியமங்களம் தலைமலை வரை உள்ள பகுதிகள். இப்பகுதியில் தான் விலங்குகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் தெங்குமராட்ட பகுதியும் அடங்கும்.
தற்போது இந்த பகுதியில் நடப்பது எல்லாம் சுற்றலா என்ற பெயரில் குடி கும்மாளம் மற்றும் பெண்கள் என்று அனைத்து அருவருப்பான காரியங்கள் மட்டுமே!!தற்போது புதிதாக உருவாகியுள்ள ஜ.டி என்னும் கொடிய நோய் பிடித்த இளைஞர்களும் இளம் பெண்களும் சுற்றுலா .... இயற்கையை ரசிக்கிறோம் என்ற பெயரில் இப்பகுதியில் தீயிட்டும் குடித்தும் தங்களின் வார இறுதியை நிறைவாய் செலவழிக்கிறார்கள்.இதற்கு சாமரம் வீசுகின்றன தனியார் தங்கும் விடுதிகள். இவைகளின் அறிவிப்பே தங்களின் பகுதி காட்டியிர்கள் நடமாட்டம் உள்ளது என்பதுதான். இவைகளால் அங்கு வாழும் எந்த ஆதிகுடிகளுக்கும் லாபமோ அல்லது வருமானமோ இல்லை.இந்த ஆதிகுடிமக்களை இங்கு உள்ள தனியார் விடுதி நிர்வாகங்கள் சுற்றுலாவாசிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல பயன்படுத்துகின்றன். அதுவும் மிக்க்குறந்த ஊதியத்தில்.!!
இதுதவிர மற்றொரு கருத்தும் வைக்கப்படுகிறது..அது வனத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்காத போது வேட்டைக்கார்ர்களுக்கு வசதியாக போய்விடும் என்பது.மேலும் போதுமான வசதிகள் வனத்துறைக்கு இல்லத்தையும் சுட்டி காட்டுகின்றனர். இது வேட்டையாளர்களுக்கு எளிதாக போய்விடும். இதற்கு காட்டுயிர் ஆர்வளர்கள் பலத்த கண்டனம் தெரிவிக்கிறார்கள். வனத்துறையின் முக்கிய வேலை வனத்தை காப்பதுதான்.அவர்களிடம் போதுமான அளவுக்கு வசதிகள் இல்லாததது உண்மை தான். அரசு புலிகள் திட்ட்த்திற்க்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள். அதை செலவழிக்க சொல்லுங்கள்.மேலும் வனத்துறை காவல்துறையிடம் இனைந்து செயல்படவேண்டும் .அப்போது தான் தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ள முடியும் மேலும்வனத்தில் வேட்டையாடி விட்டோ வனச் செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு நகரத்துக்குள் புகுந்துவிடும் கொள்ளையர்களை எளிதாக பிடிக்கலாம். மேலும் காவலதுறையுடன் இனையும் போது காவல்துறையின் மனித ஆற்றலையும் மற்றும் நவீன வசதிகளையும் எளிதாக பயனபடுத்தலாம் என்கிறார்கள்.
முதுமலையை சுற்றி உள்ளவர்கள் பெரும்பாலோர் ஆதிகுடிகள் அல்ல. அவர்கள் பெரும்பானமையோர் புலம் பெயர்ந்தவர்கள் வணிக நோக்கங்களுக்காக மட்டுமே!!மற்ற படை அவர்களுக்கு வனத்தையோ அல்லது காட்டுயிர் குறித்தோ துளியும் அக்கறை இல்லை.இவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் விறகு. அனைத்தும் வனத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது..
குறிப்பாக ஊட்டியில் இருந்து முதுமலைக்கு போகும் பாதை கடினமானது. அல்லது கூடலுர் போய் சுற்றிக்கொண்டு போகவேண்டும்.பொரும்பாலோர் கூடலூர் பாதையை தேர்ந்தெடுக்காமல் கல்லட்டி பாதையையே தேர்ந்தெடுக்கிறர்கள் .வாரத்தில் குறைந்த படசம் மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது . இவையும் குறையும்.

பொதுவாக காட்டுயிர்கள் மனித தலையீடு இன்றியே வாழ்ந்து பழகியவை. மனிதர்களின் தலையீடு மற்றும் வாகன்ங்களின் ஓய்வற்ற ஹாரன் சத்தங்கள் அவைகளின் வாழ்வு சூழலை கடினமாக பாதிக்கிறது. அவைகளின் இனப்பெருக்கத்தில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.அதிலும் மான் போன்ற மிகுந்த மென் உயிர்கள் திடிர் அதிக சத்த்த்தால் மரணம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும்  கட்டுபாடு அற்ற வாகனப் போக்குவரத்துகளால் வெளியேறும் புகையும் அதீத காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது.மேலும் இவ்வளவு வாகனப்போக்குவரத்து தான் வேட்டையாடிகளை சரியாக கவனிக்க இயலாத சூழல்.எளிதாக வனத்துக்குள் சுற்றுளாவாசிகள் பெயரில் ஊடுருவ முடிகிறது.புலி சரணாலயங்களில் முற்றிலும் வெளியாட்கள் நுழைவதை தடுப்பதன் மூலம் இத்தகைய அத்தனை தீமைகளும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.  .
இவைத்தவிர காடு வளம் பேணப்படும் போது காட்டில் கிடைக்கும் புல் ,காய்,கனிகள் ,பட்டை போன்றவை காட்டை சார்ந்து வாழும் ஆதிகுடிகளின் வாழ்வாதரத்திற்கும் மட்டுமே பயன்படும்.
சுமார் 20 ஆண்டுகள் முன் வரை சுற்றுளா என்பது வெறும் கல்வி சுற்றுளா மற்ற்ம ஆன்மீக சுற்றளா மட்டுமே!! மலை பிரதேசங்கள் சுற்றுளா என்பது அதிகரித்த மிடில்கிளாஸ் குடும்பத்தின் எதிரொலி. இவை தற்போது கிளை பரப்பி ஈகோ டூரிசம் ,ட்ரெக்கிங்,பேர்ட் வாட்சிங்,அனிமல் வாட்சிங் என்று பல பெயரில் கல்லா கட்டப்படுகிறது..வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டும் இறந்துபோகும் காட்டுயிர்கள் ஏராளம். அதுதவிர சிறு உயிர்களான பாம்புகள்,தவளைகள் ,பச்சோந்தி, போன்றவை வாகனத்தில் அடிப்பட்டு இறப்பவையும் அதிகம் .இவையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.வருடம் தோறும் வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் பாம்புகள் எண்ணிக்கை ம்ட்டுமே ஆயிரத்திற்கும் மேல் என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
தற்போது அரசும் தனியார் பள்ளிகளும் கல்விச் சுற்றுளாவை ஊக்கிவித்து வருகிறது. பெரும்பாலும் இவை மாணவர்களுக்கு பயன்படும் படி இல்லை. இதை தவிர்க்க ஆதிகுடிகளின் வாழ்வு ஆதாரத்திற்கும் சரணலாயங்களுக்கு மட்டும் பள்ளி மாணவர்களை அனுமதிக்கலாம். அவர்களுக்கு சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் வளரும். மேலும் மேற்சொன்ன எந்த தீமைகளையும் சிறுவர்கள் செய்வதில்லை..அரசு செலவழிக்கும் தொகை பயணுள்ள வகையில் அந்த வனப் பகுதியில் வாழும் ஆதிகுடிகளுக்கே பயனாக சேரும்.அவர்களின் வாழ்வும் உயரும்.

இத்தீர்ப்பு ஓய்ந்து ஒடுங்கிய பிறகு நெருங்கி வரும் வாய்ப்பு. ஆம்..

"சாகப் போற நேரத்தில தான்
ஈசலுக்கு சிறகு முளைக்கும்!!"

இனியாவது முளைக்கட்டுமே!!!......நம்பிக்கைகளும்.... 

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP