காடு அழித்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காடு அழித்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விலக மறுக்கும் இருள்

>> வியாழன், 19 ஜூலை, 2012



விலக மறுக்கும் இருள்

ஒருநாள் அதிகாலையில் கடவுள் பக்கதனுக்கு தோன்றி “இன்று மாலை சூரியன் மறையும் வரை எவ்வளவு தூரம் நீ கடக்கின்றாயோ, அவ்வளவு இடமும் உனக்குச் சொந்தம்”என்றார் .பக்தனும் மிக மகிழ்ச்சியுடன் தன்னால் முடிந்த அளவு தூரத்தை அன்றைய மாலைக்குள் கடந்து விட முடிவு செயதான்.நடந்து சென்றால் குறைந்த தூரமே கடக்க முடியும் என்பதால் , காலையிலிருந்தே ஓட ஆரம்பிக்கிறான்.. இடையில் தண்ணீர் அருந்தாமல் மதிய உணவு கூட உண்ணாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தான்.கடைசியில் மாலையில் சூரியன் மறையும் வேலையில் உடலில் உள்ள அனைத்துச் சக்க்திகளும் இழந்து மூச்சு திணறி தன் பேராசையால் கட்ந்து சென்ற அதே நிலத்தில் இறந்து கிடந்தான்.இதே நிலைமையில தான் இன்றைய மனிதர்களும். ‘வளர்ச்சி’என்ற போர்வையில் பூமியின் செல்வங்கள் சூறையாடப்பட்டு பூமி வறுமைப்பட்டு கிடக்கிறது.
ஆண்டுக்கு 60,000 சதுர கி.மீ புமியின் பரப்பளவு பாலைவனமாக மாறி வருகிறது.1970 லில் இருந்து சுமார் 200 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இது ஆண்டுக்கு சுமார் 17 மி. ஹெக்டேர் காடுகள். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பான் 326 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 179 மி.ஹெக்டேர்கள் பல வித அழிவிற்க்கும் பாதிப்பிற்க்கும் உள்ளாகியுள்ளன.இதில் 90 மி.ஹேக்டேர்கள் காடுகள் அழிப்பினாலும் மண் அரிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆண்டுக்குக் சுமார் 1.5 மி.ஹெகடேர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகிண்றன.இன்னும் முப்பது ஆண்டுகளிலில் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியக் கூடிய நிலையில் உள்ளது.இதில் 70 சதவீதம் இந்தியா போன்ற வெப்ப நாடுகளை சார்ந்திருக்கும்.

பழைய ஆவனங்களின் படி இந்தியாவில் 52 சதவிதம் காடுகள் இருந்தன்.ஆனால் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 35 முதல் 40 சதவீதமாக  குறைந்த்து.1952 -ல் வெளியான் விவசாய அறிக்கையின் படி ஒரு நாட்டிற்கு 33 சதவீதம் தேவை. இன்றைய கனக்கு படி 11.5 சதவீதமே உள்ளது. ஓர் ஆண்டில் நிமிட்த்திற்கு 2.8 ஏக்கர்கள்-நாள் ஒன்றுக்கு 10,000 ஏக்கர்கள் என 37 லட்சம் ஏக்கர்கள் அழிக்கப்படுகின்றன.அப்படி அதிகம் அழிப்பது இமய மலையின் அடிவாரத்திலும் மேற்க்கு தொடர்ச்சி ம்லைகளிலிலும்  மட்டும் தான்.வெள்ளம் ,வறட்சிக்கு முதலாம் ஜந்தாண்டு திட்டத்தில் செலவிட்ட தொகை வெறும் 5.64 கோடி தான்.அதே இப்போது 1500 கோடிகளுக்கும் மேல்! காடுகள் அழிந்து விட்டதால் பெய்யும் மழையைப் பிடித்து வைக்கும் திறன் இழந்து திடீர் வெள்ளம்!!.அந்த ஈரத்தன்மையும் காக்கும் திறன் நிலத்தில் இல்லாமல் வறட்சி.

ஆண்டு தோறும் புத்தாண்டு வாழ்த்து அட்டை தயாரிக்க மட்டும் சுமார் 15 லட்சம் மரங்கள் பலியாகி வந்தன்.இது தவிர தடுப்பு அனைகள் நீர்த்தேக்கங்கள் அணைக்கட்டுகள் கட்டுவதற்காக சுமார் 450 ஆயிரம் ஹெக்டேர் காடுகளும் விவசாயத்திற்க்கு சுமார் 2500 ஆயிரம் ஹெக்டேர்களும் சாலை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகாக சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர்களும் தொழிற்சாலைகள் கட்ட சுமார் 125  ஆயிரம் ஹெக்டேர்கள் என்று கடந்த 25 ஆண்டுகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இத்தகைய காடு அழிப்பினால் மண் அரிப்பு ஏற்பட்டு விவசாய உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது.சத்துள்ள மண், மழை நீரால்,வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நிலம் வளம் இழந்து பயனற்றதாய் மாறி விடுகிறது.ஒரு அங்குளம் மண் உறுவாக ஏறக்குறைய 500 முதல் 600 வருடங்க்கள் ஆகின்றன.ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மேல் மண் ஆண்டுக்கு 1.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கிறது. 25 நபர்கள் ஓரு ஆண்டுக்கு உண்ணத் தேவையான் உணவு தாணியங்களை ஊற்பத்தி செய்ய முடியும்.பத்து லிட்டர் மழை நீரை சுத்தம் செய்யும். ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் மண் அரிப்பினால் 30 லிருந்து 50 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி இழப்பு..ஆண்டுக்கு விளை நிலத்திலிருந்து ஆறு மில்லியன் டன்  பயிர் வளர்வதற்கு தேவையான் சத்துக்கள் அடித்து செல்லப்படுகின்றன்..இது செயற்கையாக நிலங்களிலில் கொட்டப்படும் ரசாயன் உரங்களை விட அதிகாமானது.
காடுகள  அழிக்கப்படுவதால் பெரிதும் பாதிக்கப் படுவது ஏழைகளும் பழங்குடி மக்களுமே.பழங்குடி மக்கள் இன்று அழிந்து வருவதற்க்கு முக்கிய காரண்மே காடுகள் அழிக்கப்படுவதால தான்.ஏழை மக்கள் சுள்ளி முறிக்கும் சத்தத்தை கேட்கும் வனத்துறை அதிகாரிகளின் செவிகளுக்கு மரங்களை சாய்க்கும் கோடாரி சத்தம் மட்டும் கேட்காமல் போய விடுகிறது..தமிழ்னாட்டில் மீனவர்களுக்கு கட்டுமரங்க்கள் செய்ய தேவையான் மரங்கள் க்டுமையான் தட்டுப்பாடில் உள்ளது.ஆனால் கொடைக்கான்லில் மலையை அரசாங்கமே தாரைவார்த்து விட்டது .கார்வால் மலைபகுதியில் விவசாயிகளுக்கு 'ஆஷ்' மரத்திற்க்கு பதிலாக அரசாங்கம் 'பைன்' மரத்தை தான் தர முடியும் என்றது .மறுக்கப்பட்ட மரம் விளையாட்டு கருவிகள் செய்யும் நிறுவனத்திற்க்கு !!இதே நிலைமை தான் தீப்பெட்டிக்கும் ஊதுவத்திக்கும்!!உத்திரபிரதேச அரசு பாபார் புல்லை கைத்தொழில் செய்யும் மக்களுக்கு வழங்கி கொண்டிருந்தது.அந்த புல் திடீரென்று காகித தொழிற்சாலைக்கு அனுப்பட்டது.விளைவு அதை நம்பி வாழ்ந்த 40,000 குடும்பங்கள் பட்டினியில்!! 1980க்ளிலில் ஆரம்பிக்கப்பட்ட் தரிசுநில மேம்பாடு  திட்டத்தில் 50 லடசம் ஹெக்டேர் பரப்பை வனபகுதியாக்க முடிவு செய்யப்பட்ட்து ஆனால ஆண்டுக்கு 15 ஆயிரம் சதுர கி.மீ அள்வில் தான் காடுகள் வளர்க்கப்படுகின்றன்.

2009 நவம்பரில் உதகையில் 7 நாட்கள் விடாது பெயத மழை, உதகை வரலாற்றில் மிக பெரிய பேரழிவு.190 இடங்க்களிலில் மண் சரிவு. குன்னுர் தனித்தீவானது.        5 நாட்கள் மின்சாரம் இல்லை.44 பேர் பலி .பெருளாதாரா இழப்பு மட்டும் 1000 கோடிக்கும் மேல்.1992லில் கன்னியகுமாரி கனமழையில கரைந்து போனவர்கள் 211.இந்த நூற்றாண்டில் இந்தியாவின் வட மானிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1039 பேர் பலியாயினர் .24 ம்ணிநேரத்தில் பெயத மழையின் அளவு 940 மி.மீட்டர்.காடுகள் அழிப்பு ,அழிவின் பிரம்மாண்டத்துக்கு அழைப்பு!

”காடுகள்தான் தமது கலாச்சாரத்தை நாகரீகத்தை வளர்த்த புன்னிய தளங்கள்.அவற்றை அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதாகத்தான் அர்த்தம்”என்று கூறிய சுந்தர்லால் பகுகுணா,1981 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்த போது வேண்டாமென்று மறுத்து விட்டார்.அவர் சொன்ன காரணம்”இமாலயப் பகுதிகளில் தினம் தினம் ஏரளாமான மரங்கள் அழிக்கப்படுகின்றன.காடுகள் அழிப்பதால் மண் அரிப்பு ஏற்படுகின்றது.பாரத மாதவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த வளமான மண் கடலை நோக்கி தினமும் போய கொண்டு இருக்கிறது. இது என்று தடுக்கப்படுகிறதோ அன்று தான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும்”என்றார்
தம்மையே நமக்கு தானமாக்கும் இந்த பூமிக்குக் நாம் தரும் பரிசு அழிவு.மனிதரின் முதல் நன்பன் மரம்.மரத்தின் முதல் எதிரி மனிதன்.மனித குலம் வாழ புவி வாழ வேண்டும்.எதிர்கால சந்தியினர் இம்மண்ணில மலர நாம் வாழும் இப்பூமி பாதுகாகப்பட வேண்டும்.
       ”செக்களவு பொன் ஆனாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாள்?”

Read more...

காடு கொன்று நாடாக்கி.....


காடு கொன்று நாடாக்கி.....

தேசத்தின் தேர்தல் திருவிழா முடிந்து விட்டது.பழைய அரசு போவதும் புதிய அரசு வருவதும் காலத்தின் இயல்பு.மாறாமல் இருக்க வேண்டியது அரசின் குறிக்கோள் மட்டுமே!.அது மக்களின் நல்வாழ்வியல் குறித்த சிந்தனைகளும் செயல்களும் .சமுகத்தின் தினசரி   வாழவில் அங்கமாகிவிட்ட ஊழல் குறித்த செய்திகள் ஒரு தேசத்தை அர்த்தப்படுத்தும் கருவி ஆகிவிட்டது.
அறிவியலின் அற்புதத்தால் உந்தப்பட்ட ஊடக காலம் இது.நல்ல தலைமைக்கு தலைவனை தேடும் தலைமுறை,   ஊடகங்கள் உற்பத்தி செய்யும் உடனடி தலைவர்களால் தடுமாறுகிறது.கடந்த சில நாட்களாய் ஊடகங்கள் உச்சந்தலையில் வைத்து கொண்டாடுவது ஒரு யோக மாஸ்டரை!!நம்பாமல் நகைக்கிறார் என் முகநூல் நன்பியும் உலக் அரசியல் மாற்றம் மற்றும் மக்களின் வாழ்வியல் குறித்த சிந்தனையாளருமான  ஆக்னஸ் டோர!!
ஊழள் ஒழிக்கப் பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இல்லை.ஆனால் ஒரே நாளில் ஒழிக்க கடவுள் பூமியில் இல்லை.!!

ஒவ்வொரு நாளையும் உருவாக்குவது இன்று ஊடகங்கள் தான்.செய்திகள் தேசத்தின் நாயகர்களை உருவாக்குகின்றன.செய்திகளின் தன்மை ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும்  அழிவிக்கும் பங்கு உண்டு.
நிரந்திர வளர்ச்சிக்கு வித்திடும் சுற்றுச்சூழல் குறித்த செய்திகள் பெட்டிக்குள் சுருண்ட பாம்பை போல் இருக்கிறது.ஊடகத்திற்க்கு தெரிந்த சூழல் குறித்த வார்த்தைக்ள் "அட்டூழியம்,மிதித்து கொன்றது,ஆட்கொல்லி,யானைகள் அட்டகாசம்.... போன்ற் கலைசொற்களே!!!அதுவும் 4ம் பக்கத்திலோ அல்லது 6ம் பக்கத்திலோ.

ஜீன் 14ம் தேதி தலைப்பு செய்தி ஆக வேண்டியது யோக குருவின் புன்னியத்தால் பெட்டி செய்தியானது.ஒரே நாளில் 15 மயில்கள்  மர்ம்மான முறையில் பெருந்துறை அருகே இறந்து கிடந்த்து.மயில் நம்  தேசிய பறைவை!!தேசிய பறைவைக்கே இந்த நிலைமை என்றால் ...???.
மயில் அழிந்து வரும் ஆபத்தில் உள்ள பறவை. சரனாலயம் என்று அறிவித்து பல கோடிகளை செலவு செய்யும் அரசு மயிலை மட்டும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ?!வெப்பமண்டல பகுதியில் ஈரம் உள்ள பகுதியில் வாழ்பவை மயில்கள்.தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை ,நெல்லை,தென்காசி , ஈரோடு ,கோவை மற்றும் திருப்பூரிலும் அதிகமாக உள்ளது.கொங்கு பகுதியில் கோபியில் ஆரம்பித்து விஜயம்ங்கள்ம் வரை மயில்கள் அடர்ந்து காணப்படுகிறது.சுமார் 30 கி.மீ நீளமும் 10 கி.மீ அகல பரப்பும் இதன் பகுதி.இப்பகுதி புதர்களும் சிறு சிறு மலைகளும் நிரம்பிய பகுதி.

தராளமயமாக்கலின் விளைவாக இங்கு ஆரம்பிக்க பட்ட தொழிற்பூங்கா, நகரமயமாக்கலின் விளைவாய் உருவான கட்டங்கள் இதற்கு வினையாய் வந்தது.சுமார் 3000 ஏக்கரில் உருவான புதிய தொழிற்சாலைகள் மயில்களின் வாழ்வாதரத்தை நிர்மூலமாக்கியது.மயில்களின் உணவு நிலையில் மிகுந்த சிரமத்தை ஏர்படுத்தியது.விளைவு அவை பக்கத்தில இருந்த தோட்ட பகுதியில் உணவு தேட வேண்டிய நிர்பந்ததிர்க்கு ஆளாயின.அதன் உணவை அழித்தது, இப்போது அவை தோட்டத்தில் பயிர்களை நாசம் செய்கின்றன என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
மயில்களின் இன பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த நரி, காட்டுப்பூனை, கீரி  இவைகளை அழித்துவிட்டு காரணம் சொல்கிறோம்.இயற்கை சங்கிலியை உடைத்ததின் விளைவு! வேளான்நிலங்களிலில் பூச்சிகளை கட்டுபடுத்துவதில் மயில்களின் பணியை யாரும் சிந்திப்பதில்லை.இதனால் நஞ்சு வைத்து கொல்லுகின்றனர் மயில்களை.இது தவிர உயிர்கொல்லி மருந்துகளால் இறக்கும் பூச்சி ,புழுக்களை உட்கொண்டு மடியும் மயில்கள் ஏராளம்.

1963 ம் ஆண்டு மயில்கள் இந்தியாவின் தேசிய பறவையாய் அறிவிக்கப்பட்ட்து.மியன்மாருக்கும் மயில் தான் தேசிய பற்வை.1972 ம் ஆண்டு  அமுலுக்கு வந்த வனசட்டத்தின் படி வேட்டையாடுதல் அல்லது துன்புருத்தல் தண்ட்னைக்குரிய குற்றம் .
மயில் எண்னையால் மூட்டு வலி சரியாகும்,மயில் இறகால் சலி குணமாகும் என்ற மூடதனத்தால் தினந்தேரும் பலியாகும் மயில்களின் எண்னிக்கை ஏராளம்.
கி.மு பத்தாம் நூற்றாண்டில் மயில் தோகை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் உவரி துறைமுகம் வழியாக நடைபெற்றதற்க்கு ஏரளாமான வரலாற்று சான்றுகள் உள்ளது.முகமதிய மற்றும் நாயக்கர் ஆட்சியில் மயில் உருவம் பொரிக்கப்பட்ட நாணயங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன.
தமிழர்களின் தெய்வமான முருகனின் வாகனம் மயில். மயிலாட்டம் ,மயிலாசனம்  போன்ற கலைகள் மயிலின் பெயரால் நம்மிடையே இன்றும் உள்ளது.நாம் வைக்கும் பெயர்களிலில் கூட் மயில்சாமி, மயிலானந்தம், மயில்வாகனம் என்று கலந்திருக்கிறது.இவ்வாறே நம் ஊர் பெயர்களான மயிலாடுதுறை, மயிலாப்பூர், மயிலாடும்பாறை .....இப்படி சொல்லிகொண்டே போகலாம் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த எடுத்துக்காட்டுக்களை.

தேசியம் என்பது இப்போது மாறிவிட்டது.ஆம் இந்தியாவில் தேசியம் என்பது கிரிக்கெட்டில் உலக கோப்பையை ஜெயிக்க வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் போர்  வரவேண்டும் அல்லது ஆழிபேரலை வரவேண்டும்.
தேசிய பறவை மயிலுக்கு இன்னும் கண்க்கெடுப்பு கூட எடுக்கவில்லை என்பது நமது தேசிய பற்றை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் செயல்.8000ம் மயிலகள் இருந்த விராலிமலையை சரணாலாயமாக் அறிவித்தனர்.இன்று அங்கு விரல் விட்டு எண்ணி விடலாம் மயில்களை!! கோவையில் உருவான தொழிற்பூங்கா காரனமாக 300க்கும் அதிகமான மயில்கள் அழிக்கப்பட்டன.

சிறுமலைகளையும் புதர்களையும் அழிப்பதை தடுக்க வேண்டும். மயில்களுக்கான கணக்கெடுப்பு நட்த்தி அதற்கான வாழ்விடங்களை காப்பது நமது ஒவ்வொருவரின் கடைமை.
வேளான்மைக்கு முக்கிய்துவம் தராப்படும் என்று அறிவித்துள்ள புதிய அரசு முதலில் வேளான் தோழன் மயில்களை காக்க முன்வர வேண்டும். பெருந்துறையில் இருந்து சென்னிமலை வரை உள்ள பகுதியில் குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து மயில்களின் பாதுகாக்கபட்ட பகுதியாக அறிவித்தால் மயில்களை காப்பாற்றலாம்.
இளம்பிஞ்சுகள் வரையும் ஓவியத்தில் அதிகம் இட்ம்பெருவது மயில்களே.ஓவியம் சான்றாகும் நிலைமை வேண்டுமா?காடு கொன்று நாடாக்கிய பலிச்சொல் நமக்கு வேண்டாமே.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP