எலி மான்
Mouse deer-Tragulvs Meminna-erxleben

எலி மானின் தோள்பட்டை உயரம் 25 முதல் 30 செ.மீ வரை இருக்கும்.மிகச் சிறியதாக உருவம் படைத்த இதற்க்கு கொம்புகள் இல்லை.ஆனால் சிறிய வால் உண்டு.நிறம் ஆலிவ் பழுப்பாகவும் ,உடலில் மேற்பகுதிகளில் இதுவே வெண்மையாக மாறியும் காணப்படும்.ஆண்மானுக்கு கோரைப் பற்களே ஒரு சோடி தந்தங்களாக மாறிக் காணப்படும்.மருள்கின்ற குண்முடைய எலிமான் ,தென்னிந்தியா,மத்திய பிரதேசம்,ஒரிஸ்ஸா, மற்றும் பீஹார் மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் 1800 மீட்டர் உயரமுள்ள இடங்களில் காணப்படுகிறது.இது புற்களையும் இலைகளையும் உணவாக கொள்கிறது.
குறிப்பு:இது சத்தியமங்கள காடுகளில் திம்பம் பகுதியில் காணப்படுகிறது.அந்த பகுதியில் நான் தங்கியிருந்த போது இரவு நேரங்களில் வெகு அருகிலேயே வந்துவிடும்.வாழிடம் மற்றும் உணவு பிரச்சனையால் இவை எங்களின் மீந்து போன உணவுகளை உண்பதற்க்காக வரும்.
இதை வெகு சுலபமாக கையால் பிடித்து விடலாம்
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக