அழிவின் விழிம்பில்..-34
>> வெள்ளி, 27 ஜூலை, 2012
கறுப்பு மான்.
Black buck-antilope cervicapra (Linnaeus)

ராஜஸ்தான் ,குஜராத்,மகாராஷ்டிரம்,கர்நாடகம்,மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சமவெளிப் பிரதேசங்களிலும் திறந்த வெளி புதர்க்காடுகளிலும் இவை வசிக்கின்றன.ஒரு மந்தையில் 10 முதல் 30 க்கும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் இவ்வகை மான்கள்,உலகிலேயே மிகவேகமாக ஓடக் கூடியவை.புற்கள்,இலைகள்,பழங்கள் மற்றும் வேலமரங்களின் காயகள் இவற்றின் ஆகாரமாகும்.
இறைச்சி,தோல் மற்றும் பொழுது போக்கிற்க்காக வேட்டையாடப் பட்ட்தாலும் ,உறைவிடம் அழிக்கப் பட்ட்தாலும் இவற்றின் எண்ணிகை வெகுவாக்க் குரைந்துள்ளது.இவற்றில் பொரும்பாலனவை பாதுகாக்க்ப்பட்ட வன்விலங்கு சரணாலயங்களிலும் தெசிய பூங்காக்களிலும் உயிர் பிழைத்து வருகின்றன.மத அடிப்படையில் பல் நூற்றாண்டுகளாக இம்மான்களை பாதுகாத்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிஷ்னோ ப்ழங்குடியினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.இம்மாநிலத்தில் ‘கெஜார்லி’ பகுதியில் மக்கள் குடியிருப்புகளிடையே கருப்பு மான்கள் சுதந்திரமாக நடமாடுவதை இன்றும் காணலாம்
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக