அழிவின் விழிம்பில்..-24
>> செவ்வாய், 24 ஜூலை, 2012
சிவப்பு பாண்டா
red panada-ailurus fulgens -(f.cuvier)

தரையில் மெதுவாக செல்லும் சிவப்பு பாண்டா மரங்களில் வேகமாக ஏறக் கூடியது.நேபாளம் ,சிக்கிம்,பர்மா மற்றும் தென் சீனாவை ஒட்டியுள்ள இமயமலை பகுதிகளில் காணலாம்.மூங்கில் தலைகள் ,பழங்கள்,வேர்கள் ,பூச்சிகள்,பற்வையின் முட்டைகள் ஆகியவற்றை தின்று வாழும்.ஆயினும் உயிரியல் வளர்க்கப்படும் சிவப்பு பாண்டாக்கள் ரொட்டி,பால் ,முட்டைகள் மற்றும் சிறிய பறவைகளை கூடத் தின்னவல்லவை.இது பூனையை போலச் சீறவும் கரடியை போல உறுமவும் ,நாயை போல குரைக்கவும் வல்லது.பொதுவாக இது தந்து மூஞ்சியை நீரில் வைத்து கரடியைப் போல நீரை உறிஞ்சிக் குடிக்கும்.பூனையை போல சிவப்பு பாணட தனது வளை நகங்களை சற்றெ காலுக்குள் இழுத்து வைத்து கொள்ளக்கூடியது.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக